கலக்கத்தில் இருக்கும் தமாஸ் நடிகர்.. காரணம் அந்த க எழுத்து நடிகர் தானாம்.. இதுவும் போச்சுன்னா?
சென்னை: தமாஸ் நடிகர் படத்துக்கு பெரும் பலம் உள்ள நிலையிலும் அந்த க எழுத்து நடிகர் படத்தை நினைத்து ரொம்பவே கலக்கத்தில் இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. தன்னை போலவே வளர்ந்து வரும் அந்த நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்து வருவதும் வித்தியாசமான படங்களை அவர் கொடுத்து வருவதும் தான் காரணம் என்கின்றனர்.
தமாஸ் நடிகரின் படத்துக்குத் தான் பாதி அளவுக்கான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகளவில் வசூலை ஈட்டி விடலாம் என்கிற முடிவில் அந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமும் திட்டமிட்டு வருகிறது.

ஆனால், படம் ரசிகர்களை கவரவில்லை என்றால் எளிதில் குறைவான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யும் க எழுத்து நடிகர் உடனடியாக உச்சத்துக்கு சென்று விடுவார் என்பதால் தமாஸ் நடிகர் ரொம்பவே கலக்கம் அடைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஒரு வருஷம் லேட்: இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தமாஸ் நடிகரின் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஸ் நடிகர் தயாரிப்பு பணிகளை ரொம்பவே தாமதமாக்கிய நிலையில், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், கடைசியில் பண்டிகை தேதி குறிவைத்து வெளியாக காத்திருக்கிறது. தொடர்ந்து அந்த நடிகரின் படங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவி வரும் நிலையில், அதே சிக்கலில் இந்த படமும் சிக்கி விடக் கூடாது என ரொம்பவே மெனக்கட்டு வருகின்றனர்.
கவலையை கொடுத்த ’க’ நடிகர்: தமாஸ் நடிகர் படம் பெரிதாக போட்டியில்லாமல் வெளியானால் ஈஸியாக வெற்றியை பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய நடிகர்கள் படங்களுடன் மோதாமல் திட்டமிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில், க நடிகரும் அதே தேதியில் படத்தை வெளியிட உள்ள நிலையில், தமாஸ் நடிகருக்கு பெரும் கவலை ஆகி விட்டது என்கின்றனர்.
கொஞ்சம் மிஸ் ஆனாலும்: தமாஸ் நடிகரின் படத்துக்குத் தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு பெரும் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து விட்டால் ஓடிவிடும் என நினைத்துக் கொண்டிருக்கும் தமாஸ் நடிகர் கொஞ்சம் மிஸ் ஆனாலும், ரசிகர்களுக்கு படத்தில் உள்ள ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போய் விட்டால் க எழுத்து நடிகர் படத்திற்கான தியேட்டர்கள் அதிகரித்து விடும் என்றும் அது தனக்கும் தனது சினிமா வாழ்க்கைக்கும் பெரிய சிக்கலை உண்டாக்கி விடும் என யோசித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











