ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாதே.. கடைசி நேரத்தில் ஜர்க்கான தமாஸ் நடிகர்.. தள்ளிப்போகும் ரிலீஸ்?
சென்னை: தமாஸ் நடிகர் நடிப்பில் கடைசியாக வெளியான அந்த மொக்கை காமெடி படம் பண்டிகை நாளில் வெளியாகியும் பாஸ் ஆகாமல் படுதோல்வியை சந்தித்தது.
புலியை பார்த்து பூனை சூடுப் போட்ட கதையாக முன்னணி நடிகர்கள் போன ரூட்டில் முந்திக் கொண்டு முந்திரிக்கொட்டையாக மாறிய தமாஸ் நடிகர் ஒட்டுமொத்தமாக பலத்த அடி வாங்கியது தான் மிச்சம் என்கின்றனர்.
இந்நிலையில், அடுத்த படத்தில் நடிகருக்கு பயம் காட்டும் அளவுக்கு ஒரு பெரிய விஷயத்தை இயக்குநர் செய்து இருக்கிறார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.

சூடுபட்ட பூனை: சினிமாவில் வெற்றித் தோல்வி என்பது அனைவருக்குமே வரும் ஒன்று தான். உச்ச நட்சத்திரம் நடித்த படங்களே கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஓடாமல் பிளாப் ஆகி வரும் நிலையில், வளர்ந்து வரும் அந்த தமாஸ் ஹீரோ கடைசியாக பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் பண்ணினால் படகு கரை சேர்ந்து விடும் என நினைத்து கன்னிவெடியை படகிலே வைத்து வெடித்த நிலையில், மொத்தமும் கவிழ்ந்தது தான் மிச்சம் என்கின்றனர்.
சூடுபட்ட பூனை அடுப்படி ஏறாது என்பார்கள். ஆனால், அடுத்த படத்தில் மீண்டும் ரிஸ்க் எடுத்துப் பார்த்து விடும் முயற்சியில் எக்ஸ்பீரியமன்ட் படத்தை செய்து வருகிறாராம் அந்த நடிகர்.

பயம்: இயக்குநர் நடிகரை வைத்து என்னவெல்லாம் வித்தை செய்யலாம் என இஷ்டத்துக்கு இயக்கித் தள்ளி வரும் நிலையில், நாம இதெல்லாம் பண்றதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்கிற கேள்வியை அடிக்கடி நடிகர் கேட்டுக் கொண்டே இயக்குநரை டார்ச்சர் பண்ணியதுதான் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்து ஷூட்டிங் கொஞ்ச நாட்கள் தடைபட்டது என பேச்சுக்கள் பரவின.
ஆனால், ஹீரோவை எந்தளவுக்கு மூளைச்சலவை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து நீங்க இனிமே பத்து பேரை இல்லை சார் நூறு பேரை அடிச்சாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என அளவில்லாமல் ஆக்ஷன் காட்சிகளை அந்த தமாஸ் ஹீரோவை வைத்து படமாக்கி உள்ளாராம்.

ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாதே: இனிமே நீங்க கராத்தே போடலாம், குங்ஃபூ போடலாம் யாருமே உங்களை ட்ரோல் பண்ண மாட்டாங்க என ஒட்டுமொத்த படத்தையும் எடுத்து இயக்குநர் போட்டுக் காட்டி இருக்கிறார். சமீபத்தில் ஃபைனல் ரஷ்ஷை பார்த்த நடிகர் அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.
நம்மள வச்சி நல்லா செஞ்சிட்டாரே இந்த இயக்குநர் என நினைத்துக் கொண்டு, ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டு, சில ஆக்ஷன்களை கட் செய்து விட்டு அதற்கு பதில் காமெடி காட்சிகளை சேர்க்கலாமா என இயக்குநருக்கு சஜஷன் செய்து வருகிறாராம். அதன் காரணமாக ஷூட்டிங்கே முடிந்தாலும் படத்தின் ரிலீஸ் பல மாதங்கள் தள்ளிப் போகும் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











