உச்ச நடிகர் படத்தில் மறுக்கப்படும் வாய்ப்பு.. இயக்குநர் மீது கோபத்தில் தமாஸ் நடிகர்.. என்ன ஆச்சு?
சென்னை: ஏற்கனவே பழக்கமான இயக்குநரே தன்னை உச்ச நடிகர் படத்தில் நடிக்க வைக்காத நிலையில், அடுத்து அந்த ரண கொடூர இயக்குநரும் தன்னை சீண்டாமல் துரத்தி அடித்து வருவதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தமாஸ் நடிகர்.
பாஸ் நடிகர் தயாரிப்பில் நடித்து வரும் தமாஸ் நடிகர் எப்படியாவது உச்ச நட்சத்திரம் படத்தில் நடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் பல ஆண்டுகள் போராடி வரும் நிலையில், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை மறுத்து வருவது இயக்குநர்கள் எல்லாம் கிடையாது என்றும் இதற்கு காரணமே உச்ச நடிகர் தான் என்றும் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே பல பேரை வளர்த்து விட்ட நிலையில், எல்லாரும் தனக்கே வேட்டு வைத்து வரும் நிலையில், புதிதாக யாரையும் வளர்த்து விடக் கூடாது என்கிற முடிவுடன் உச்ச நடிகர் இருந்து வருகிறாராம். ஆனால், அது தெரியாமல் நடிகர் அந்த இயக்குநர் தான் காரணம் என அவர் மீது கோபம் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அது மட்டும் வேண்டாம்: தனது படத்தில் தன்னை விட அதிக கவனத்தை திருப்பும் நடிகர்கள் யாரும் இருக்கக் கூடாது என்றும் குறிப்பாக முன்னணி ஹீரோக்கள் என யாருமே நடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக பக்கத்து ஸ்டேட்டில் இருந்து கூட ஆட்களை கொண்டு வந்து நடிக்க வைங்க, இங்க இருக்க யாருக்கும் சான்ஸ் கொடுக்கக் கூடாது என ஏற்கனவே தெளிவாக இயக்குநர்களிடம் சொல்லி விட்டாராம் அந்த உச்ச நடிகர்.
இதுவரை கொடுத்தது இல்லை: பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும், இதுவரை எந்த ஒரு இளம் நடிகருக்கும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பை அந்த நடிகர் கொடுக்காமல் இருக்க காரணமே அதுதான் என்றும் கடைசி வரை அதை தொடரவும் நடிகர் முடிவு செய்து இருக்கிறார் என்றும் அப்படி இளம் ஹீரோக்களை முன்னிறுத்தி விட்டால் தான் குணசித்ர நடிகராக மாறிவிடுவேன் என்கிற பயம் தான் காரணம் என்கின்றனர்.
இயக்குநர் மீது கோபம்: ஆனால், இது தெரியாமல் அந்த இயக்குநர் மீது கோபத்தில் உள்ள தமாஸ் நடிகர் தனது படத்தில் ஆபாச வசனங்கள், போதைப் பொருள் பழக்கங்கள், கொடூரமான சண்டைக் காட்சிகள், ஆபாச காட்சிகள் எல்லாம் இருக்காது என தனக்கு இயக்குநர் தான் சான்ஸ் கொடுக்கவில்லை என நினைத்துக் கொண்டு மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. நடிகர் தன் மீது கோபத்துடன் இருப்பதை புரிந்துக் கொண்ட இயக்குநர் தனது நண்பரை வைத்து விவரத்தை விளக்கி சொல்லி விட்டார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











