கழுத்துக்கு மேல கடன்.. ஓடாத படத்தை ஓட வைக்க தியேட்டர் தியேட்டரா அலையும் தமாஸ் நடிகர்?

By Staff

சென்னை: தமாஸ் நடிகரின் பல ஆண்டு தவம் கடைசியாக திரைக்கு வந்த நிலையில், ஏற்கனவே அவரே அந்த படம் வெளியாகாது என பல சீன்களை இயக்குநருக்கே தெரியாமல் ஆட்டையைப் போட்டு தனது மற்ற படங்களில் வைத்தது எல்லாம் தற்போது நடிகருக்கு பேக் ஃபயர் ஆகி விட்டது. பெரிய போட்டி எல்லாம் இல்லை என்றும் தன்னை வளர்த்து விட்டவரை எல்லாம் ஒரு ஆளாகவே மதிக்காமல் கிளாஷ் விட்ட நிலையில், புதிதாக இன்னொரு போட்டி முளைத்தது தமாஸ் நடிகருக்கு பெரும் சிக்கலை உருவாக்கி விட்டதாம்.

வேர்ட் ஆஃப் மவுத்தில் அந்த படத்திற்கு நல்ல டாக் கிடைத்திருப்பதால், தனக்கு கிடைத்த தியேட்டர்களும் ஸ்க்ரீன்களும் குறைய ஆரம்பித்து விடும் என்பதை அறிந்த தமாஸ் நடிகர் தியேட்டர்களுக்கு படையெடுக்கும் பணியை ஆரம்பித்து விட்டார்.

Comedy hero tries to save his recent release movie with this plan?

லாபம் வந்தால் தான்: அதிக செலவு செய்து உருவாக்கப்பட்ட படத்தின் மீது வட்டிக் கடனே பல கோடி உள்ளதாம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்காத நிலையில், போட்ட பில்டப் எல்லாம் வீணாப்போச்சே என தமாஸ் நடிகர் ரொம்பவே அப்செட்டாகி இருப்பதாக கூறுகின்றனர். பல முனை போட்டியின்றி சோலோவாக வெளியாகி இருந்தாலாவது போட்ட பணத்தை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

தியேட்டர் விசிட்: படத்தின் கன்டென்ட் பார்த்து பார்த்து புளித்துப் போன கதை என்பதால் ரசிகர்களை படம் எங்கேயும் பெரிதாக கனெக்ட் செய்யவில்லை. நடிகருக்கும் குரல் கொடுத்தவருக்கும் சம்பளம் கொடுக்காததை போல மியூசிக்கிற்கும் சம்பளம் கொடுக்கவில்லையா என்ன பிரச்சனை என தெரியவில்லை. இந்த படத்திற்கு விருப்பமே இல்லாத வகையில் மியூசிக் போட்டு பழி தீர்த்து விட்டார் அந்த லெஜண்ட். இந்நிலையில், பேட்ச் வொர்க் செய்யும் வேலைக்காக தியேட்டர் விசிட்டில் இறங்கியிருக்கிறார் நடிகர். படத்தில் லாபம் வந்தால் தான் அவருக்கு வருமானம் கிடைக்குமாம். இது மட்டுமின்றி இன்னொரு மொழியில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்திற்காக அங்கேயும் புரமோஷன் வேலைகளை ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

அடுத்த படத்திற்கு ஆபத்து: இந்த படமே வசூலில் பெரிதாக அடி வாங்கினால் அடுத்து அவர் நடித்துள்ள படத்துக்கும் பெரிய அடி வியாபாரத்தில் விழும் என்பதால் எப்படியாவது படத்தை வெற்றிப் படமாக மாற்றி விட வேண்டும் என நடிகர் முயற்சித்து வருவது அவருக்கு எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது சந்தேகம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X