நல்ல இயக்குநருக்கு நான் எங்க போறது.. அட்வைஸ் பண்ண நண்பரை கடுப்படித்த காமெடி நடிகர்?

சென்னை: காமெடி நடிகர் ஒருவர் சமீபத்தில் ஹீரோவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இண்டஸ்ட்ரியில் பலரது தூக்கத்தையே கெடுத்து விட்டது என்கின்றனர். குறிப்பாக இந்த காமெடி நடிகரைத் தான் அந்த விஷயம் அதிகம் பாதித்துள்ளதாகவும் இதுவரை ஒரு வாழ்த்துக் கூட சொல்லாமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என்கின்றனர்.

காமெடி நடிகராக இருந்து இனிமேல் ஹீரோதான் என தனது ரூட்டை மாற்றிய நடிகருக்கு சில சிம்பிள் வெற்றிகள் கிடைத்தாலும், பல பெரிய தோல்விகளே அதிகம் கிடைத்தது.

 Comedy Hero upsets over friend advice

பல வருடமாக ஹீரோவாகவே நடித்து வரும் அந்த நடிகருக்கு இந்தளவுக்கு பாராட்டுக்கள் குவியும் அளவுக்கு ஒரு படம் கூட அமையவில்லையே என்கிற அதிருப்தியில் அவரே வேதனையில் இருக்கும் போது, காமெடி நண்பர் ஒருவர் நல்ல இயக்குநரைத் தேடிப் போ என அட்வைஸ் செய்து செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

காமெடி நடிகரின் வெற்றி:

காமெடி நடிகராக பல ஆண்டுகள் மொக்கை காமெடிகளை அடித்து வந்த அவருக்கு ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வந்த நிலையில், ஒரே படத்தில் ஓஹோன்னு வாழ்க்கை என்பது போல கஷ்டப்பட்டதுக்கு எல்லாம் கை மேல் தற்போது பலன் கிடைத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சி என்றாலும், சினிமாவில் பலருக்கு அவமானம் ஆகி பொறாமையால் பொங்கி வருவதாகவே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வம்பு நடிகர் கோபம்:

போட்டியாக வெளியான வம்பு நடிகரின் படத்தை பற்றியோ அவரது நடிப்பு மற்றும் அவர் போட்ட உழைப்பை பற்றியோ ஒருவர் கூட உயர்த்தி பேசாத நிலையில், காமெடி நடிகரை பலரும் பாராட்ட ஆரம்பித்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் மீது வம்பு நடிகர் ரொம்பவே கோபமாக உள்ளாராம்.

எப்படியாவது தனது அடுத்த படத்தின் மூலமாவது இந்த அவமானத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவே குறியாக அனைத்து விஷயங்களையும் தானே தலையிட்டு செய்யப் போவதாக முடிவெடுத்து இருக்கிறார் என்கின்றனர்.

சிரிப்பை இழந்த காமெடி நடிகர்:

பல ஆண்டுகளாக ஹீரோவாக இருந்தும் தனக்கு கிடைக்காத பேரும் புகழும் ஒரே படத்தில் சக போட்டியாளருக்கு கிடைத்திருப்பதை பார்த்து தனது சிரிப்பையே அந்த பிரபல காமெடி ஹீரோ இழந்து டென்ஷனில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், அவரது நண்பரும் சக காமெடி நடிகருமான ஒருவர், மச்சான் நீயும் நல்ல இயக்குநர்களை தேடிப் போய் நடி அப்போதான் உனக்கும் பேர் கிடைக்கும் என அட்வைஸ் பண்ண கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நடிகர் கடித்துக் குதறாத அளவுக்கு நண்பரையே விளாசி வாங்கி விட்டார் என செவி வழி செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வருகின்றன.

எனக்கு என்ன கிடைக்கும்னு இருக்கோ அது, எனக்கு கிடைச்சா போதும். நாம எந்த இயக்குநரையும் தேடிப் போக முடியாது. அவங்க நமக்கு ஏத்த மாதிரி கதை ரெடி பண்ணி கூப்பிட்டாத்தான் உண்டு. கமர்ஷியலா எனக்கு கிடைக்கிற வெற்றியே சந்தோஷமா இருக்கு, தேவையில்லாமல் பேசி டென்ஷனை கிளப்பாதே என கடுப்படித்து இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X