நம்பர் நடிகையுடன் 2வது லட்டு சாப்பிட ஆசைப்படும் காமெடி ஹீரோ... அதிரடி ஆஃபர் கூட தர்றாராம்..!
நம்பர் நடிகையுடன் மீண்டும் நடித்து விட முயற்சித்து வருகிறாராம் காமெடி ஹீரோ.
சென்னை: நம்பர் நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசையல்ல, பேராசையுடன் இருக்கிறாராம் காமெடி ஹீரோ.
காமெடியனாக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் அந்த காமெடி ஹீரோ. நம்பர் நடிகையுடன் ஒரு படத்தில் டூயட் கூட ஆடினார். அந்த ராசி தான் தற்போது தனக்கு கை நிறைய படங்கள் என நம்புகிறாராம் நடிகர்.
இதனால், மீண்டும் அதே போன்ற வாய்ப்பு கிடைக்குமா என பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், தன் சம்பளத்தைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறாராம் நடிகர்.

நடிகை சென்டிமெண்ட்:
சமீபமாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. ஹீரோ வேடமும் சொல்லிக் கொள்ளும்படி பேர் வாங்கித் தரவில்லை. இதனால் தான் மீண்டும் நடிகை செண்டிமெண்ட்டுக்காக பிளான் பண்ணி வருகிறாராம் நடிகர்.

சம்பளமே வேண்டாம்:
புதிய படங்களில் நம்பர் நடிகையைப் போலவே தமிழின் முன்னணி நாயகிகள் சிலருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு காமெடிக்கு கிடைத்துள்ளது. ஆனாலும், பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும் என அடம் பிடிக்கிறாராம் நடிகர். இதற்காக சம்பளம் வேண்டாம் உட்பட பல அதிரடி ஆஃபர்களையும் தருகிறாராம்.

விடாமுயற்சி:
ஆனால், நடிகை கேட்கும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது என்பது பெரிய விசயம் தான். இதனால் நடிகரின் ஆசையைக் கேட்டு மயக்கம் போடாத குறையாக நழுவி விடுகிறார்களாம் சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் நடிகரும் விடாமல் முயற்சித்து வருகிறாராம்.

இது தான் காரணம்:
ஒரு முறை கிடைத்ததே அதிர்ஷ்டம் என இருக்காமல், மீண்டும் லட்டு சாப்பிட அலைகிறாரே என நடிகரை வைத்து காமெடி செய்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால், நடிகையுடன் அப்போது நடித்த ராசியில் தான் தன்னால் ஒரு ரவுண்டு வர முடிந்தது. மீண்டும் அதே மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்தால், திரும்பவும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என திட்டம் போடுகிறாராம் காமெடி.


Click it and Unblock the Notifications











