»   »  மறந்தும் இதை செய்ய வேண்டாம் 'மீண்டும்' கட்டளையிட்ட தளபதி

மறந்தும் இதை செய்ய வேண்டாம் 'மீண்டும்' கட்டளையிட்ட தளபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்க, நெருங்க ரசிகர்களுக்கு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாராம் தளபதி நடிகர்.

ஏற்கனவே தேவையில்லாத வாசகங்கள் மற்றும் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக் கூடாது.அப்படி, இப்படி என்று உதார் விட்டுப் பேசுவது கூடாது.

Commander Actor Again Order his Fans

முக்கியமாக ஆளுங்கட்சியை எந்தக் காரணம் முன்னிட்டும் வம்பிழுக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சில கடும் உத்தரவுகளை ரசிகர்களுக்கு தளபதி பிறப்பித்து இருக்கிறாராம். அதில் தனது பெயரில் உள்ள இயக்கம் சார்பில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்பது முக்கியமான உத்தரவாம்.

கடைசியாக வெளியான அந்த இரண்டெழுத்துப் படம் போல, இந்த காக்கிப் படமும் ஆகக்கூடாது என்பதில் நடிகர் மிகவும் கவனமாக இருக்கிறாராம்.

அதனால் தான் எந்த வழியில் பிரச்சினை வரும் என்று தெரிந்தாலும், உடனடியாக அதில் தலையிட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும்போது இன்னும் எத்தனை கட்டளைகளோ? என்ற கிண்டல்கள் தற்போது கோலிவுட்டில் எழத் தொடங்கியிருக்கிறது.

English summary
Do not Forget to do this, The Commander Actor Again said His Fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil