»   »  வெற்றியைத் தக்க வைக்க...தீயாய் வேலை செய்யும் நடிகர்

வெற்றியைத் தக்க வைக்க...தீயாய் வேலை செய்யும் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் மூஞ்சி நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரவுடியான அந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

குமாராக நடித்த அந்தப்படம் தவிர நடிகரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் நடிகர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

தற்போது முன்னணி நடிகையுடன் அவர் நடித்த ரவுடியான படம் வெற்றிப் படமாக மாறியதில், நடிகர் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார்.

இதனால் வெற்றியைத் தக்க வேண்டும் என்ற முனைப்பில் தற்போது அடுத்தடுத்த படங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வருகிறாராம்.

மேலும் முந்தைய படங்களைப் போல அடுத்து எதுவும் தனது படங்கள் தோல்வி அடையக் கூடாது என்றும் திட்டவட்டமாக இருக்கிறாராம். இதற்காக கதை கேட்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கும் முடிவிற்கு நடிகர் வந்திருக்கிறாராம்.

விரைவில் நடிகருக்காக கதை கேட்கும் குழு நடிகரின் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் நடிகரின் தொடர் தோல்வியைப் பார்த்து படத்தைத் தயாரித்த நடிகர், கடைசி நேரத்தில் படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டார்.

படம் வெற்றி பெற்றதும் தற்போது நடிகரின் அடுத்த படத்தையும் தனது நிறுவனமே தயாரிக்கும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் நடிகர்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சுமார் மூஞ்சி நடிகர்...

English summary
After a huge hit face actor now maintain his Success in Cine Industry. Actor recently formed one committee regarding to hear the story of the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil