புதிய வாய்ப்புகளைப் பெற அடித்துக் கொள்ளும் நடிகைகள்...
சென்னை: புதிய தமிழ்ப் படவாய்ப்புகளைப் பெறுவதில் ஆனை நடிகைக்கும், ஊதா நடிகைக்கும் தான் அதிக போட்டி நிலவுகிறதாம்.
சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப்படங்களைத் தராத போதும், தோல் நடிகைக்கு தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதேபோல், வாரிசு நடிகை, நம்பர் நடிகைகள், ஸ்வீட் நடிகை என களத்தில் பலர் உள்ளபோதும், நேரடி போட்டி ஆனை நடிகைக்கும், ஊதா நடிகைக்கும் தானாம்.
காரணம் தற்போதைய நிலவரப்படி மிக இளம்வயது நாயகிகள் என்றால் இவர்கள் இருவரும் தானாம். மற்ற நடிகைகள் விரைவில் செட்டிலாகி விட்டால் தமிழில் நம்பர் ஒன் நடிகை இடத்தைப் பிடித்து விடலாம் என இருவருமே கனவு கண்டு வருகிறார்களாம்.
அலை நடிகையின் இளைய மகளும் இவர்களின் வயது தான் என்ற போதும், அவரது முதல் படம் தோல்வி கண்டதால் அப்போட்டியில் அவர் இல்லை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











