நிஜத்திலும் முழு வில்லியாக மாறிய வாரிசு நடிகை.. ஹீரோ, ஹீரோயின்களுக்கு டார்ச்சர்!
படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் வில்லியாகவே மாறி விட்டாராம் வாரிசு நடிகை.
சென்னை: படப்பிடிப்புகளில் நாயகன், நாயகியை பேச விடாமல் இடையில் நந்தி போல் அமர்ந்து டார்ச்சர் செய்து வருகிறாராம் வாரிசு நடிகை.
வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்த நடிகரின் மகளான நடிகைக்கு அப்பாவின் செல்வாக்கால் சினிமாவில் ஜொலிக்க இயலவில்லை. ஆஜானுபாகுவான உடல்வாகு, கம்பீரமான குரல் என இருக்கும் நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பைவிட வில்லி கதாபாத்திரம் தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

இதனால் நடிகையின் கைவசம் உள்ள படங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற படங்களில் எல்லாம் வில்லி வேடம் தான். அதிலும் இரண்டு முன்னணி நாயகர்களின் படங்கள்.
இந்தப் படப்பிடிப்பு தளங்களில் நிஜ வில்லியாகவே நடந்து கொள்கிறாராம் வாரிசு நடிகை. ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரங்களில்கூட நாயகனையும், நாயகியையும் பேச விடாமல், இடையில் அமர்ந்து தொல்லை கொடுக்கிறாராம். நடிகை பெரிய இடம் என்பதால் இதனை வெளியில் சொல்லவும் முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் தவித்து வருகிறார்கள்.
[ 'ஒ****ல'... செய்தியாளர் சந்திப்பில் கெட்டவார்த்தை பேசி அதிர வைத்த 'வடசென்னை' நடிகர்! ]
படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் வில்லியாகவே மாறி விட்ட நடிகையின் போக்கு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











