காசு பணம் துட்டு மணி மணிக்காக கொள்கையை தளர்த்திய சர்ச்சை நடிகை?
Recommended Video

சென்னை: சம்பளம் கிடைத்தால் போதும் என்று கொள்கையை சுத்தமாக தளர்த்திவிட்டாரா சர்ச்சை நடிகை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
சர்ச்சை நடிகை பெரிய ஆளான பிறகு தனக்கென்று சில கொள்கைகள் வைத்துக் கொண்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறினார்.

அம்மணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் ஹிட்டானதால் இயக்குனர்கள் அவரை நம்பி துணிந்து படம் எடுக்கிறார்கள். அவர் சம்பளத்தை உயர்த்திய கையோடு கொள்கைகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார் போல.
பழையபடி மரத்தை சுத்தி சுத்தி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்களை கலாய்க்கும் இயக்குனரின் படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
கோட் நடிகருடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு உள்நோக்கம் உள்ளது. ஆனால் அதன் பிறகு அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்களில் எல்லாம் ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் என்று தெரிகிறது.
காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் முன்பு சம்பாதித்துவிடுவோம் என்று நினைத்து இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications









