விட முடியாத ஆசையால் பயத்தில் இருக்கும் சர்ச்சை நடிகை
Recommended Video

சென்னை: சமத்து நடிகையை பார்த்து சர்ச்சை நடிகை நிம்மதி பெருமூச்சு விடுகிறாராம். இருப்பினும் லைட்டா பயமாக உள்ளதாம்.
சர்ச்சை நடிகை தனது காதலரை இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் அவர்.
இந்நிலையில் அவருக்கு ஒரு பயம் வந்துவிட்டது.

மார்க்கெட்
சும்மாவே இளம் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தால் அக்கா மாதிரி இருப்பதாக கூறுகிறார்கள். திருமணம் வேறு நடந்துவிட்டால் மார்க்கெட் படுத்துவிடுமோ என்று நடிகைக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

படங்கள்
அண்டை மாநிலத்து மருமகளாகியுள்ள சமத்து நடிகையின் மார்க்கெட் திருமணத்திற்கு பிறகும் சூப்பராக உள்ளது. சொல்லப் போனால் திருமணத்திற்கு பிறகு அம்மணி நடித்த படம் ஒன்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதை பார்த்து தான் சர்ச்சை நடிகை நிம்மதி அடைந்துள்ளாராம்.

பயம்
திருமணத்திற்கு பிறகு சமத்து நடிகையின் மார்க்கெட் பாதிக்கப்படவில்லை என்றால் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சர்ச்சை நடிகை நிம்மதியாக உள்ளாராம். இருப்பினும் மலையாள திரையுலகில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளாராம்.

நடிகைகள்
மலையாள திரையுலகில் திருமணமான நடிகைகள், குழந்தை பெற்றுள்ள நடிகைகள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் தான் சர்ச்சை நடிகை மலையாள திரையுலகை குறி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











