5 விரலை காட்டும் நடிகை: ஷாக் ஆகும் தயாரிப்பாளர்கள்
சென்னை: தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 5 விரல்களை காட்டுகிறாராம் சர்ச்சை நடிகை.
சர்ச்சை நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சீனியர் ஹீரோயின் என்றாலும் இளம் ஹீரோக்கள் கூட அவருடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார்கள்.
அம்மணியோ தன்னையே ஹீரோவாக காட்டும் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

நம்பிக்கை
பொடி விற்ற படம் அம்மணிக்காகவே ஓடியது. கிளாமர் இல்லை, ஸ்பெஷல் மேக்கப் இல்லை, ஹீரோ இல்லை, டூயட் இல்லை, டிஷ்யூம் டிஷ்யூம் இல்லை. இப்படி பட இல்லைகளோடு வெளியானாலும் படம் ஹிட்டாகிவிட்டது. அதற்கு காரணம் அம்மணியின் நடிப்பு மட்டுமே. தன்னால் ஒரு படத்தை தாங்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாக உள்ளது.

பாராட்டு
பொடி படத்தை அடுத்து சில பிரச்சனையோடு வெளியான படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பலர் நடித்திருந்தாலும் அம்மணியின் நடிப்பு தான் ஹைலைட். ரசிகர்கள் மட்டும் அல்ல கோலிவுட்காரர்களும் நடிகையின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாராட்டுகள் அம்மணி காதை எட்டவே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

ரூ. 5 கோடி
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போன்று மார்க்கெட் உள்ளபோதே சம்பளத்தை உயர்த்தியுள்ளார் நடிகை. தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ. 5 கோடி கேட்கிறார். அவர் சொல்லும் தொகையை கேட்டு லைட்டா அதிர்ச்சி அடைந்தாலும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்பதால் கனத்த இதயத்துடன் ஒப்புக் கொள்கிறார்களாம்.

திருமணம்
அம்மணி தனது காதலரை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இருவரும் திருமணம் செய்வது போன்று தெரியவில்லை. இந்த காதலாவது அவருக்கு கை கூட வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். காதலரை திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளார் அம்மணி.


Click it and Unblock the Notifications










