அந்த ஆளு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்: குமுறிய சர்ச்சை நடிகை
சென்னை: ரப்பர் பாடி படத்தில் நடிக்கவே முடியாது என்று கறாராக கூறிவிட்டாராம் சர்ச்சை நடிகை.
விரல் வித்தை நடிகரை பிரிந்த பிறகு ரப்பர் பாடியை காதலித்தார் சர்ச்சை நடிகை. அவருக்காக மதம் மாறினார். ஏன் நடிப்பை கூட விட்டுவிட்டு வீட்டோடு இருக்க முடிவு செய்தார்.
அவ்வளவு நடந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

படம்
விரல் வித்தை நடிகரை பிரிந்த பிறகும் கூட அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார் சர்ச்சை நடிகை. அது பலருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால் ரப்பர் பாடி இருக்கும் பக்கம் கூட திரும்புவது இல்லை நடிகை.

ஹீரோயின்
ரப்பர் பாடி தான் பெரிய ஹீரோவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் சர்ச்சை நடிகையை ஹீரோயினாக போட விரும்பினார். இதையடுத்து ஒருவரை தூதும் அனுப்பினார்.

மன்னிப்பு இல்லை
ரப்பர் பாடியின் படத்தில் மட்டும் நடிக்கவே முடியாது என்று சர்ச்சை நடிகை கறாராக கூறிவிட்டாராம். அவர் தான் வாழ்க்கை என்று நினைத்தபோது ஏமாற்றிவிட்டார். அதை ஒரு நாளும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்றாராம் நடிகை.

நண்பர்
விரல் வித்தை நடிகரை நண்பனாக பார்த்ததால் அவர் மீது கோபம் இல்லை என்றாராம் சர்ச்சை நடிகை. என்னாது, நண்பராக பார்த்தீங்களா, நம்பிட்டோம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











