Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளரை கதறவிட்ட சர்ச்சை நடிகை
சென்னை: சர்ச்சை நடிகை ஒரேயொரு படத்திற்கு சம்பளத்தை குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் சர்ச்சை நடிகை. அவர் படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள். காரணம் அவரின் மார்க்கெட் நிலவரம் அப்படி.
அண்மை காலமாக பெரிய ஹீரோக்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி வருகிறார் நடிகை.
சம்பளம்
சர்ச்சை நடிகை நடிப்பில் அண்மையில் வெளியான படத்திற்காக அம்மணி தனது சம்பளத்தில் ரூ. 1.25 கோடியை குறைத்துள்ளார். சம்பளத்தை குறைத்துவிட்டார் என்று தயாரிப்பாளரால் சந்தோஷப்பட முடியவில்லை. காரணம் படப்பிடிப்புக்கு அவருடன் வந்த பாதுகாவலர்கள் 7 பேருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளத்தை தயாரிப்பாளர் தான் கொடுத்தாராம்.
தயாரிப்பாளர்
இப்படி பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அந்த அம்மா ரூ. 5 கோடியே வாங்கியிருக்கலாம் என்று தயாரிப்பாளர் புலம்பியுள்ளார். அம்மணி சம்பளத்தை குறைத்து நடித்த படம் ஓடவில்லை. அந்த படத்தில் அவரின் அழகை பார்த்து மயங்கியவர்கள் அதிகம். அதே சமயம் அவரின் நடிப்பை பார்த்து கடுப்பானவர்களும் அதிகம். தலைவி தனது ரூட்டை மாற்றி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்த ராங்கி கதாபாத்திரம் எல்லாம் அவருக்கு நன்றாக இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடம்
நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்த அம்மணி தற்போது தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் டூயட் பாடி வருகிறார். அவரின் இந்த மாற்றத்திற்கு பின் இருப்பது யாரோ?. அவர் ரூட்டை மாற்றியது பிற நடிகைகளை கடுப்படைய செய்துள்ளது.
காதலர்
சர்ச்சை நடிகை தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லை என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். சர்ச்சை நடிகையே தனது கொள்கையை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த காமெடி பீஸ் மட்டும் இறங்கி வருவேனா என்று அடம்பிடிக்கிறதே என்று கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.