பெருசா சவால் விட்ட வாரிசு நடிகை: சத்தமில்லாமல் ஆப்பு வைத்த சர்ச்சை நடிகை

By Siva

சென்னை: சர்ச்சை நடிகைக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே போட்டியாக உள்ளதாம். சர்ச்சை நடிகை ரூட்டை மாற்றி வாரிசு நடிகையை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.

சர்ச்சை நடிகையிடம் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். வாரிசு நடிகை அக்கட தேசத்தில் நடித்த ஒரு படத்தை தவிர பிற படங்களில் நடிப்பில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

ஹீரோயின் தான் என்றாலும் ஓரிரு காட்சிகளில் வந்து ஹீரோவை காதலித்துவிட்டு செல்லும் கதாபாத்திரம் மட்டுமே வாரிசு நடிகைக்கு கிடைக்கிறது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

வாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகை போன்று வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. ஆனால் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லையாம். நான் நடித்து தானே அந்த படம் பெரிய ஹிட்டானது. என்னை நம்பி வெயிட்டான கதாபாத்திரம் கொடுங்கள் என்று நடிகை கேட்டாலும் இயக்குநர்கள் அதற்கு தயாராக இல்லையாம்.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

வாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை. சர்ச்சை நடிகையை காலி செய்து காட்டுகிறேன் பார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவால் விட்டுள்ளாராம் வாரிசு நடிகை. அந்த சவாலை கேட்டு முதலில் விழுந்து விழுந்து சிரித்ததே இயக்குநர்களாம். இந்தம்மா நடிக்கிற நடிப்புக்கு சர்ச்சை நடிகையை காலி செய்யப் போகிறாராம் என்று சிரித்தார்களாம்.

கோலிவுட்

கோலிவுட்

வாரிசு நடிகையால் சர்ச்சை நடிகை அளவுக்கு நடிக்க முடியாவிட்டாலும் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறதாம். சர்ச்சை நடிகை அண்மை காலமாக கொள்கையை தளர்த்தியது கூட வாரிசு நடிகையை காலி செய்யத் தான் என்று முணுமுணுக்கப்படுகிறது. சர்ச்சை நடிகை ரூட்டை மாற்றிய பிறகு வாரிசு நடிகையின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகை

இளம் நடிகை

சர்ச்சை நடிகை தனது கொள்கைகளை தளர்த்தி வருவதை பார்த்து வாரிசு நடிகை மட்டும் அல்ல பல இளம் நடிகைகள் புலம்புகிறார்களாம். சர்ச்சை நடிகை ஹீரோயினுக்கு முக்கியமான கதையில் மட்டுமே நடித்து வந்ததால் முன்னணி ஹீரோக்களுடன் இளம் நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். தற்போது சர்ச்சை நடிகையே டூயட் பாட சம்மதித்துள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X