மகளுக்காக ஏகப்பட்ட டீலிங் செய்யும் பிரபல நடிகை.. பாஸ் நடிகர் வரை பர்சனலா சந்திச்சு பேசிட்டாராம்?
சென்னை: பிரபல ரியாலிட்டி ஷோவில் மகள் விளையாடி வரும் நிலையில், அவரை கடைசி வரை நிகழ்ச்சியில் தக்க வைக்க பல போராட்டங்களை தொடர்ந்து பல வாரங்களாக அம்மா நடிகை செய்து வருவதாகவும் இந்த வாரம் எப்படியாவது தனது மகளை காப்பாற்றி விட வேண்டும் என டிவியுடன் சில டீலிங்கையும் நடிகை போட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
பல நடிகர்களை திருமணம் செய்துக் கொண்டு பின்னர் அவர்களை பிரிந்து தற்போது யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் அந்த நடிகை எப்படியாவது தனது மகளையும் தன்னை போல ஹீரோயின் ஆக்கி விட வேண்டும் என்று பெரும் போராட்டத்தை செய்து வருகிறார்.
இதற்காக பலரிடம் பகையை வளர்த்துக் கொண்டாலும் தொடர்ந்து தனது மகளுக்காக பாடுபட்டு வரும் அந்த நடிகை தற்போது மகளை காப்பாற்ற டிவியுடனே டீலிங் போட்டிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சர்ச்சை நடிகை: அந்த நடிகையின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பும் வகையிலேயே இருக்கும் என ஏகப்பட்ட ட்ரோல்கள் அந்த நடிகை மீது எழுந்தாலும், பலரும் அந்த நடிகையின் போல்டான செயலை பாராட்டுவதையும் தவறியதில்லை. தனியாளாக தனது குடும்பத்தை உயர்த்த தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார்.
ரியாலிட்டி ஷோவில் மகள்: நடிகையை போலவே அவரது மகளும் சரியான ராங்கியாக உள்ளாரே என இந்த முறை மகளின் பெயரையும் அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி இதுவரை இல்லாத அளவுக்கு நெகட்டிவிட்டியை தனது குழந்தைக்கும் டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார் அந்த நடிகை என்கிற பழியும் அவர் மீது விழுந்து விட்டது.
மகளுக்காக பாஸ் நடிகரை சந்தித்து: இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை விட்டு கிளம்பப் போவது எப்படியும் தனது மகள் தான் என்கிற தகவல் அந்த நடிகைக்கு தெரிய வந்ததும் பயம் வந்து விட்டதாம். எப்படியாவது இன்னும் சில வாரங்கள் தனது மகளை அந்த ஷோவில் இருக்க வைக்க டிவி சேனலிடமும் பாஸ் நடிகருடனும் தனிப்பட்ட முறையில் முறையிட்டுள்ளாராம். மேலும், சில நிகழ்ச்சிகளை குறைவான சம்பளத்தில் செய்துக் கொடுக்கிறேன் என்றும் டீலிங் பேசியுள்ளதாக கிசுகிசு கிளம்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











