காதலர் செய்யும் அதே விஷயத்தை செய்யத் துடிக்கும் சர்ச்சை நடிகை
Recommended Video

சென்னை: சர்ச்சை நடிகை இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் அவர். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதாலேயே சர்ச்சை நடிகை என்று பெயர் வாங்கியுள்ளார்.
இளம் இயக்குனர் ஒருவரை காதலிக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள்.

புத்தாண்டு
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் தற்போது ரூட்டை மாற்றி இளம் நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார். பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட முடிவு செய்துள்ள நடிகை புதிய அவதாரம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். புத்தாண்டில் அந்த புது அவதாரத்தை எடுக்கப் போகிறாராம்.

இயக்கம்
கையில் உள்ள படங்களை முடித்த பிறகு நடிகை இயக்குனர் அவதாரம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். வீட்டில் ஏற்கனவே ஒரு இயக்குனர் இருக்கும் நேரத்தில் அவரும் இயக்குனர் ஆக உள்ளார். ஒரு வேளை காதலர் தான் ஊக்கம் கொடுத்து புது அவதாரம் எடுக்க வைக்கிறாரோ?. அப்படி என்றால் அவர் படத்தின் ஹீரோ அவரின் காதலரா?

ஹீரோ
இயக்குனராக இருக்கும் தனது காதலரை படங்களில் ஹீரோவாக்கிப் பார்க்க நடிகை ஆசைப்படுகிறார். ஒரு வேளை காதலரை ஹீரோவாக்கத் தான் அவர் இயக்குனர் அவதாரமே எடுக்கிறாரோ?. இருக்கும் இருக்கும். தனக்காக எவ்வளவோ செய்யும் காதலருக்காக அவர் இதை கூட செய்ய மாட்டாரா என்ன?

நடிகை
ஒரு நடிகை இயக்குனர் அவதாரம் எடுப்பது புதிது அல்ல. ஆனால் சர்ச்சை நடிகை படம் இயக்குவார் என்று யாரும் நினைக்கவில்லை. நடிகை விரைவில் தனது காதலரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தால் அது பற்றி மட்டும் அவர் யோசிக்கவே இல்லை.


Click it and Unblock the Notifications











