For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அந்த வாயாடி நடிகை சமூக வலைதளத்தை விட்டு ஓட அவர் தான் காரணமா? பரபரக்கும் கோலிவுட்!

  |

  சென்னை: அந்த வாயாடி நடிகையிடம் பலர் பேசவே பயப்படும் நிலையில், தன்னிடம் தைரியமாக பேச வருபவர்களையும் வாய்க்கு வந்தபடி இழிவாக பேசி வாயை அடைக்கும் அளவுக்கு செய்து வந்த அவர், திடீரெனெ சமூக வலைதளத்தை விட்டு ஓடுவதற்கு நம்பர் நடிகை தான் காரணம் என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

  குடும்ப பிரச்சனையை பொதுவெளியில் பப்ளிசிட்டி பண்ணி, பலருடன் சர்ச்சை செய்து வருகிறார் அந்த வாயாடி நடிகை.

  வாயாடி நடிகையின் ஆட்டத்தை அடக்குகிறேன் பார் என மேலும் இரு பெண் பிரபலங்கள் கோதாவில் குதிக்க இந்த லாக்டவுனில் சூப்பர் என்டர்டெயின்மென்ட் கிடைத்துள்ளது என ஒட்டுமொத்த மீடியாவும் அவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.

  சூப்பர் பர்த்டே கிஃபிட்.. வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று 'காட்டுப் பயலே’ ஒரு நிமிட வீடியோ!சூப்பர் பர்த்டே கிஃபிட்.. வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று 'காட்டுப் பயலே’ ஒரு நிமிட வீடியோ!

  யூடியூபில் சம்பாதிக்க

  யூடியூபில் சம்பாதிக்க

  மூன்றாவதா அல்லது நான்காவதா ஆளுக்கொரு கணக்கு சொல்கின்றனர். அதெல்லாம் நமக்கு எதுக்கு, நாம யாரு வம்புக்கும் போகல தும்புக்கும் போகல.. அந்த பழைய நடிகை புதுசா இப்போ திருமணம் செய்து கொண்டதே, யூடியூபில் வைரலாகி காசு சம்பாதிக்கத் தான் என்ற பேச்சுக்கள் அவரது யூடியூப் பக்கத்தின் கமெண்ட்டுகளிலேயே அதிக அளவில் காணப்படுகின்றன.

  வில்லங்கம்

  வில்லங்கம்

  லிப் லாக் முத்தமெல்லாம் கொடுத்து கல்யாணத்தை எந்தவொரு சமூக இடைவெளியும் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோத சமீபத்தில் பண்ண வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிட்டு பலரது வெறுப்பை ஈஸியா அந்த நடிகை சம்பாதித்துக் கொண்டார். புதுசா கட்டிய கணவரின் விட்டு வைத்த விவாகரத்து தற்போது அவரது வாழ்வில் வில்லங்கமாக வந்து விடிந்து விட்டது.

  ஊரே சிரிக்க

  ஊரே சிரிக்க

  உன்னை நான் திட்ட.. என்னை நீ திட்ட.. நீ ஒழுக்கமா.. நான் ஒழுக்கமா என்கிற ரேஞ்சை எல்லாம் கடந்து ஆபாசமாகவும், கெட்ட கெட்ட வார்த்தைகளாலும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி சர்ச்சையை கிளப்பி விட்டார் அந்த நடிகை. நடிகையின் பக்கம் நிற்காமல், பழைய பாக்கி பக்கம் ஆதரவாக பேசிய அந்த டிவி ஜட்ஜ் அம்மாவுக்கும் ஒரே நொடியில் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்து விட்டார்.

  சட்டென்று மாறிய துணிச்சல்

  சட்டென்று மாறிய துணிச்சல்

  சிங்கப்பெண்ணாக சீறிய அவர், யார் வந்தாலும், லெஃப்டு.. ரைட்டு வாங்குறேன்னு, தோனி போல பேட்டை எடுத்து எல்லா பக்கமும் சிக்ஸர் அடித்து வந்த அந்த வாயாடி நடிகை, திடீரென இந்த வம்பே வேண்டாம் என அந்த குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் இருந்து ஒரே ஓட்டமாக ஓடியே போய் விட்டார். இதற்கான காரணம் இதுதான் என தற்போது ஒரு பூதம் கிளம்பி இருக்கு.

  அவங்கதான் காரணமாம்

  அவங்கதான் காரணமாம்

  அந்த டிவி ஜட்ஜ் அம்மாவிடம் தகாத வார்த்தைகளால் எகிறி எகிறி பேசிய அந்த நடிகை, பொசுக்குன்னு ஏன், அந்த நம்பர் நடிகையும் தான் அந்த நடன இயக்குநருடன், அப்படி இப்படி இருந்தாங்க, அந்த நடன இயக்குநரின் முதல் மனைவிக்கு சப்போர்ட்டா நீங்க யாரும் பேசுனீங்களா என கேட்க, சத்தமே இல்லாமல், நம்பர் நடிகை தரப்பு வச்ச வேட்டுத் தான் இவர் கப்புச்சுப்புன்னு இடத்தை காலி பண்ண காரணம் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

  English summary
  Controversial actress quit from social media by this reason only. Some netizens spread the message viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X