சர்ச்சை நடிகைக்கு நேர் எதிராக செயல்படும் சேது நடிகர்
Recommended Video

சென்னை: சர்ச்சை நடிகை செய்வதற்கு நேர் எதிராக செய்கிறார் சேது நடிகர்.
ரப்பர் பாடியுடனான காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த சர்ச்சை நடிகை தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் லைன் கட்டி நிற்கிறார்கள்.
நடிகையின் பெயரை கேட்டதுமே தயாரிப்பாளர்களும் அந்த படத்திற்கு ஓகே சொல்கிறார்கள்.

நடிகை
சர்ச்சை நடிகை செகண்ட் இன்னிங்ஸை துவங்கியதில் இருந்து புதுமுக இயக்குனர்குளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவரது இந்த முயற்சி வெற்றியும் அளித்துள்ளது.

காதலர்
நடிகை தற்போது இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் முதலில் காதலரிடம் கதையை சொல்ல வைக்கிறாராம்.

சம்மதம்
காதலர் இயக்குனர்களிடம் கதை கேட்டுவிட்டு ஓகே சொன்னால் தான் நடிகை அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். நடிகையின் இந்த பழக்கம் சில இயக்குனர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

புதுமுகம்
கோலிவுட்டில் எப்பொழுதுமே பிசியாக இருக்கும் சேது நடிகரோ சர்ச்சை நடிகைக்கு நேர் மாறாக புதுமுக இயக்குனர்கள் வேண்டாம் என்கிறாராம். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறாராம் சேது நடிகர்.


Click it and Unblock the Notifications









