காதலரை உயர்த்திப் பார்க்க தன்னை தாழ்த்திக் கொள்ளும் சர்ச்சை நடிகை
Recommended Video

சென்னை: சர்ச்சை நடிகை தனது காதலருக்காக இந்த அளவுக்கு இறங்கி வந்துள்ளது கோலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.
சர்ச்சை நடிகை புதுப் படங்களை ஒப்புக் கொள்ளும் போது தனது கதாபாத்திரம் மற்றும் சம்பளம் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இல்லை என்றால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்.
பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார்.

இயக்குனர்
தனது காதலரை பெரிய இயக்குனராக்கிப் பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை. இதற்காக தனது கொள்கையை எல்லாம் தளர்த்திக் கொண்டிருக்கிறார்.

அட்ஜஸ்ட்
ஹெட் நடிகரை தனது காதலரின் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் நடிகை. இதற்காக கதை, கதாபாத்திரம், சம்பளம் என்று எதைப் பற்றியுமே கேட்காமல் அவர் படத்தில் நடிக்கிறார்.

காதல்
காதலரை உயர்த்திப் பார்க்க தன்னை தானே தாழ்த்திக் கொள்கிறாரே நடிகை. இது எல்லாம் தேவையா? திறமை இருந்தால் காதலர் இயக்குனர் அவராகவே முன்னுக்கு வரப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

பரிந்துரை
கொள்கையை தளர்த்தியதோடு மட்டும் அல்லாமல் தனது காதலரின் படத்தில் நடிக்குமாறு பெரிய ஹீரோக்களுக்கு தூது விடுகிறார் நடிகை. காதல் என்று வந்துவிட்டால் நடிகை கணக்குப் பார்க்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய முன்னாள் காதலர் ஒருவருக்கு அவர் கொடுத்த பரிசுகளை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படமே எடுக்கலாம் என்பது குறிப்படத்தக்கது.


Click it and Unblock the Notifications









