அடி வாங்கும் மார்க்கெட்: யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த சர்ச்சை நடிகை
Recommended Video
சென்னை: சர்ச்சை நடிகை தனது மார்க்கெட் அடி வாங்கத் துவங்கியுள்ள நேரத்தில் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சர்ச்சை நடிகை. அவர் நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான 4 படங்களில் ஒன்று மட்டும் தான் ஹிட். அந்த படம் ஹிட்டானதற்கு அவர் அல்ல மாறாக ஹீரோ தான் காரணம்.

இந்நிலையில் அம்மணி பிரபல நடிகர்கள் இருவருடன் சேர்ந்து 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஒருவருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்நிலையில் நடிகையின் மார்க்கெட் டல்லாகியுள்ளது என்று பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் நடிகையும் தனது சம்பள விஷயத்தில் கறாராக இல்லாமல் அட்ஜஸ்ட் செய்கிறாராம்.
தனது கெரியரை பற்றி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகையின் மனம் மாறியுள்ளதாம். அதாவது இத்தனை நாட்களாக அவரை திருமணம் செய்ய காதலர் துடித்தாராம், அவர் தள்ளிப் போட்டாராம். ஆனால் தற்போது நடிகை தனது காதலரை திருமணம் செய்து கொண்டு குழந்தை, குட்டிகள் என்று இருக்க முடிவு செய்துள்ளாராம்.
திருமணத்திற்கு பிறகு படங்கள் தயாரிப்பதில் தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம். நடிகை நடிக்க உள்ள த்ரில்லர் படத்தை கூட அவரின் காதலர் தான் தயாரிக்கப் போகிறார். நடிகை தான் தனது காதலர் பெயரில் படத்தை தயாரிப்பதாகவும் பேச்சு உள்ளது.
நடிகையின் மனம் மாறியதில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான். அவருக்கும், காதலருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











