செட்டிலேயே தண்ணி பழ நட்சத்திரத்தை அடித்து ஜூஸ் போட்ட பிரபலங்கள்?.. செம அடியாம்.. என்ன ஆனது?

By Staff

சென்னை: தமிழ்நாட்டில் தான் மிகப்பெரிய நட்சத்திரம் என சொல்லிக்கொண்டு திரிபவர் தண்ணி பழ ஸ்டார். ரியாலிட்டி ஷோவில் எல்லாம் கலந்துகொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார். வாய்க்கு வந்ததை இஷ்டத்துக்கு பேசும் அவர்; கூடிய விரைவிலேயே யாரிடமாவது செமத்தியாக உதை வாங்கப்போகிறார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். தற்போது அதன்படியே நடந்திருப்பதாக கிசுகிசுக்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

சோஷியல் மீடியாக்கள் அதிகம் பெருகிவிட்ட காலம் இது. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனும் அதில் ஒரு யூடியூப் சேனலும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் செலிபிரிட்டி ஆகிவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் திறமை இருப்பவர்கள் சோஷியல் மீடியா, யூடியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி முன்னேறும்போது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ஆனால் திறமையே இல்லாதவர்கள் முன்னேறும்போதுதான் இந்த நவீன காலம் இப்படி கலிகாலமாக இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றுகிறது.

Controversial YouTube Star Allegedly Attacked During Reality Show Shoot
Photo Credit:

தண்ணி பழ ஸ்டார்: அப்படி திறமையே இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசியும், தோன்றியதை செய்தும் பிரபலமானவர்தான் தண்ணி பழ ஸ்டார். தமிழ்நாட்டில் தான்தான் அடுத்த பெரிய நடிகர். என்னால்தான் கோலிவுட்டை பாதுகாக்க முடியும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருப்பவர். ஆரம்பத்தில் அவரது வீடியோக்களை விளையாட்டாக எல்லோரும் கடந்து சென்றார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அவரோ, தான் செய்யும் கோமாளித்தனங்களை சீரியஸாகவே செய்ய தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
விவாகரத்து விஷயத்தில் நடிகருக்கு மூளையாக செயல்படும் நடிகை.. ஆத்தாடி இவ்வளவு பிளானா?
விவாகரத்து விஷயத்தில் நடிகருக்கு மூளையாக செயல்படும் நடிகை.. ஆத்தாடி இவ்வளவு பிளானா?

எல்லோருக்கும் கடுப்பு: அவரை சில யூடியூப் சேனல்கள் எடுத்தபோது பலரும் கண்டித்தார்கள். இதுபோன்றவர்களை பேட்டி எடுத்து அவர்களை வளர்த்துவிடவே கூடாது. நீங்கள் இப்படி செய்வதால்தான் இவர் எல்லாம் மேற்கொண்டு மேற்கொண்டு கோமாளித்தனங்களை செய்து மற்றவர்களை வெறுப்பேற்றுகிறார் என ஓபனாகவே அடித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டார் அந்த தண்ணி பழ நட்சத்திரம்.

அங்கேயும் அப்படித்தான்: அந்த ஷோவிலும் அப்படித்தான் நடந்துகொண்டார். முதலில் ஒரு போட்டியாளரை பாசமலர் தங்கை போல் பார்த்த அவர்; அதற்கும் முன்னதாக வேறு மாதிரி பழக முயன்றார். அதேபோல் அழகான போட்டியாளர் ஒருவரிடம் இஷ்டத்துக்கு வழிந்து வழிந்து பேச போட்டியாளர்கள் எல்லாம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கிண்டல் செய்து பார்த்தார்கள், பக்குவமாக சொல்லி பார்த்தார்கள். ம்ஹூம் எதையும் அவர் கேட்பதாக இல்லை. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துகொண்டே இருந்தார்.

வெளுத்த பிரபலங்கள்: இந்நிலையில் அந்த தண்ணி பழ ஸ்டார் பற்றி புதிய தகவல் வந்திருக்கிறது. அதாவது, பிரபலமான சேனலில் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோ ஒன்று நடந்துவருகிறது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த செட்டில் ஒரு பாடகரும் இருக்கிறார். நடிகரும் இருக்கிறார். இந்த ஷோவின் ஷூட்டிங்கின்போது தண்ணி பழ ஸ்டார் வழக்கம்போல் கோமாளித்தனங்களை செய்திருக்கிறார். சரி என்று விட்டிருக்கிறார்கள் பாடகரும், நடிகரும். ஒருகட்டத்தில் சில விஷ வேலைகளை எல்லாம் பார்த்து; வாயும் ஓவராக பேசினாராம். இதனால் காண்டான அவர்கள், இந்த தண்னி பழ ஸ்டாரை அடித்து பிழிந்து எடுத்துவிட்டார்களாம். எவ்வளவோ அந்த நபர் கெஞ்சியும் இவர்கள் விடுவதாக இல்லையாம். பிறகு அருகில் இருந்தவர்கள் விலக்கிவிட்டார்களாம். இந்த தாக்குதலில் தண்ணி பழ ஸ்டார் நிலைகுலைந்து போய்விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X