அந்த பிரச்சனையை கிளப்பியதே சர்ச்சை நடிகை தானாம்.. போட்ட ஸ்கெட்ச் பக்காவா வேலை செய்து விட்டது!

By Staff

மும்பை: மீண்டும் பாலிவுட்டில் தனது மார்க்கெட்டை நிலை நாட்ட அந்த சர்ச்சை நடிகைக்கு ஒரு பெரிய பிரம்மாண்ட படம் தேவைப்பட்ட நிலையில், இன்னொரு நடிகை கைகளுக்கு அது சென்று விடக் கூடாது என சர்ச்சை நடிகை போட்ட ஸ்கெட்ச் பக்காவாக வேலை செய்து விட்டதாக தாராவியில் இருந்து தகவல் வந்துள்ளது.

Recommended Video

Jayam Ravi மனைவியிடம் சண்டை போடும் Dhanush? | Trisha, Aarthi

பயோபிக் படங்களை தேடி ஓடி நடித்து வரும் அந்த சர்ச்சை நடிகைக்கு எப்படியாவது மீண்டும் பாலிவுட்டிலும் தனது கொடியை நிலை நாட்ட வேண்டும் என்கிற ஆசை அதிகளவில் எழுந்துள்ளது.

பலரையும் பகைத்துக் கொண்டு இப்போ எங்கே திரும்பினாலும் ஈட்டி பாய்கிறதே என்கிற வேதனையுடன் இருந்து வருகிறார் அந்த சர்ச்சை நடிகை.

இதிகாச படம்

இதிகாச படம்

மத ரீதியிலான இதிகாச படங்களை எடுக்க பல தரப்புகளுக்கும் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதால் ஏகப்பட்ட இதிகாச படங்கள் சமீப காலமாக மீண்டும் உருவாக தொடங்கி உள்ளன. குறிப்பாக அந்த ஒரு இதிகாசத்தை மையமாக வைத்து அரசியல் பல நடைபெற்று வருவதால் பலரும் அதே இதிகாச கதையை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வயதான நடிகை

வயதான நடிகை

40 வயதை கடந்து விட்ட அந்த வயதான நடிகை இன்னமும் லீடு ரோலில் நடித்து வருவதால் இந்த பிரம்மாண்ட படத்தையும் அவரை வைத்தே எடுத்து விடலாம் என இயக்குநர் தயாரிப்பாளரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் நடிகைக்கு கைக்கு எட்டிய வாய்ப்பு வாய்க்கு எட்டுவதற்கு முன் சர்ச்சை நடிகை தட்டிப் பறித்து விட்டார்.

பக்கா ஸ்கெட்ச்

பக்கா ஸ்கெட்ச்

அந்த வயதான நடிகைக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் இதில் அவர் போய் அதிகமான சம்பளத்தை கேட்கிறார் என சமூக வலைதளங்களில் வதந்திகளை கட்டு அவிழ்த்து விட்டதே அந்த சர்ச்சை நடிகை தானாம். தன்னோட ரசிகர்கள் வட்டத்தை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட டிரெண்டிங்குகளை அந்த நடிகைக்கு எதிராக உருவாக்கி தயாரிப்பாளருக்கு பயங்கரமாக பிரஷர் கொடுத்துள்ளார்.

வேற மதம்

வேற மதம்

மேலும், அந்த நடிகை தற்போது வேறு ஒரு மதத்தை பின் பற்றி வருகிறார். அவர் எப்படி நம்முடைய வழிபாடு தெய்வமாக நடிக்க முடியும் என பல பிரச்சனைகளை சத்தமே இல்லாமல் கிளப்பி விட அந்த நடிகையை விட்டு வேறு ஒரு நடிகையை புக் செய்ய இயக்குநர் முடிவு செய்து விட்டாராம்.

தயாரிப்பாளரிடம் நேரடியாக

தயாரிப்பாளரிடம் நேரடியாக

ஆனால், தயாரிப்பாளரை நேரடியாக சர்ச்சை நடிகை கரெக்ட் செய்யவே அந்த வாய்ப்பு சர்ச்சை நடிகைக்கே கிடைத்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஒரு இயக்குநர் முழு படத்தையும் எடுத்து முடித்து விட அவரை துரத்தி விட்டு தானே இயக்குநர் என போட்டுக் கொண்டதால் பல இயக்குநர்களும் அந்த நடிகையை வைத்து இயக்க பயந்து வரும் நிலையில், புதிதாக ஒரு ஆடாக இந்த இயக்குநர் சிக்கிக் கொண்டு தவிக்கிறாராம்.

பிரபலங்களிடம் கெஞ்சல்

பிரபலங்களிடம் கெஞ்சல்

தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான அரசியல் தலைவர் படம் ஓடவே இல்லாத நிலையில், பல பிரபலங்களிடமும் போன் போட்டு உதவி கேட்டு வருகிறாராம் அந்த நடிகை. படம் பார்த்துட்டேன் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க என நடிகை கெஞ்சுவதை பார்த்து சில சினிமா நண்பர்கள் அவருக்கு உதவி செய்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X