எகிறும் பட்ஜெட்... கலங்கும் சர்ச்சை நாயகி படத் தயாரிப்பாளர்!
சர்ச்சை நாயகியை மெயினாக வைத்து ஒரு த்ரில்லர் படம் உருவாகி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ரெடியாகி வரும் அந்த படத்துக்கு இன்னும் 20 நிமிட படம் ஷூட் பண்ண வேண்டியிருக்கிறது. கெஸ்ட் ரோலில் நடிக்கும் சேது நடிகருக்காக வெயிட்டிங்.
ஆனால் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதைவிட ரொம்ப அதிகமாகிக்கொண்டே போகிறதாம். 14 கோடி வரை செலவிட்ட பிறகும் இன்னும் நான்கு கோடிக்கு செலவு இருக்கிறதாம். எடுத்தவரை எடிட் செய்ததில் முதல் பாதியே இரண்டு மணி நேரம் வருகிறதாம்.
எடுக்கத் தொடங்கியபோது நடிகைக்கு இருந்த மார்க்கெட் வேறு... இப்போது அப்படி இல்லையே என்று புலம்பும் தயாரிப்பாளர் கலங்கிப் போய் இருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications