ஒரு தடவை பட்டதே போதும்.. ஒரே அடியாக ஓட்டம் எடுத்த சமத்து நடிகை.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: சமத்து நடிகைக்கு மீண்டும் அதே போன்ற ஒரு வாய்ப்பு வர ஆள விடுங்கடா சாமி என ஓட்டம் பிடித்துள்ளாராம்.

சினிமாவை தாண்டி புது ரூட்டிலும் கால் பதிக்க நினைத்த அந்த பிரபல நடிகைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏகப்பட்ட எதிர்ப்புகளே கிளம்பியது.

திரும்பிய இடங்களில் எல்லாம் திட்டு வாங்கிய நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பு அம்மணியை தேடி வரவே பெரிய கும்பிடு போட்டுள்ளாராம்.

புது ரூட்

புது ரூட்

சினிமாவில் சமத்து நடிகையாக நடித்து வந்த அந்த பிரபல நடிகை திடீரென சீறும் புலியாக மாறி நடிக்க உங்களுக்கு ஒரு அருமையான ரோல் என இயக்குநர்கள் பிரைன் வாஷ் பண்ணவே, முதல் சீசன் ஓடியதை வைத்து கணக்குப் போட்டு பார்த்து அந்த கிணற்றில் குதித்துள்ளார்.

ஒரே திட்டு

ஒரே திட்டு

நம்ம நடிச்சிருக்கிற நடிப்பை பார்த்து உலகமே பாராட்டப் போகுது என நினைத்துக் கொண்ட நடிகைக்கு நடிப்புக்காக பாராட்டு கிடைத்தாலும், அந்த தொடரை ஒப்புக் கொண்டதற்கு உள்ளூரிலேயே திரும்பும் திசையெல்லாம் ஒரே திட்டு மயமாகி போனது.

மறைமுக தடை

மறைமுக தடை

அந்த நடிகையின் செயலை கண்டிக்கும் வகையில் அவருக்கு மறைமுக எதிர்ப்புகளும் தடைகளும் கோலிவுட்டில் அரங்கேறி வருகிறதாம். ஏற்கனவே அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய காதல் படத்திற்கும் சிக்கல்கள் உருவாகும் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வேற கம்பெனி

வேற கம்பெனி

அந்த கம்பெனி தயாரித்த தொடரில் நடித்த உங்களின் நடிப்பை பார்த்து வியந்து போய்ட்டோம், எங்க கம்பெனி தயாரிக்கும் ஒரு புதிய தொடருக்கும் உங்களோட சேவை தேவை என சமீபத்தில் ஒல்லி நடிகர் படத்தை வெளியிட்டு பல்பு வாங்கிய நிறுவனம் கோரிக்கை வைத்திருக்கிறதாம்.

நடிகை ஓட்டம்

நடிகை ஓட்டம்

ஆளவிடுங்கடா சாமி.. ஒரு தடவை பட்டதே போதும் மறுபடியும் அந்த பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன் என அந்த புதிய ஆஃபரை வேண்டாம் என மறுத்துள்ளாராம் அந்த பிரபல நடிகை. ஆனால், அவர் மறுத்ததற்கு பின்னால், வேறு ஒரு முக்கிய காரணம் உள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

இன்டிமசி அதிகமாம்

இன்டிமசி அதிகமாம்

ஏற்கனவே ரிலீசான தொடரில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்து விட்டார். இந்நிலையில், புதிதாக வந்த வாய்ப்பில், கதையை விட நிறைய சதைக்கே முக்கியத்துவம் இருக்கிறதாம். அதிகளவில் ஹீரோவுடன் இன்டிமசி காட்டி போல்டாக நடிக்க வேண்டும் என்கிற பெயரில் இயக்குநர் கதை சொன்னதால் தான் வேண்டவே வேண்டாம் என ஓட்டம் பிடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X