இந்த விடுமுறைக்கும் பின் வாங்கிய அந்த போலீஸ் படம்.. கோலிவுட்டில் கோல் போட முடியாத அப்செட்டில் நாயகி
சென்னை: அந்த அழகான நாயகிக்கும் கோலிவுட்டுக்கும் இப்போதெல்லாம் செட்டே ஆக மாட்டேங்குது. அவர் நடிக்கும் படங்கள் விடுமுறை தின
கொண்டாட்டமாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் எப்போ ரிலீசாகும் என்பது தெரியாமலே போய்விடுகிறது.
ஒரு வருஷத்துக்கும் மேலாக ரிலீசாகாமல் இருக்கும் அந்த நடன இயக்குநரின் போலீஸ் படம் இந்த விடுமுறைக்கு அந்த உச்ச நடிகர் படத்துடன் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாமனாரும், மருமகனும் இந்த விடுமுறை கொண்டாட்டத்திற்கு ரவுண்டு கட்டி அடிக்கவுள்ளதால், மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய்விட்டது.

முதல் முறை போலீஸ் அதிகாரியாக
அந்த நடன இயக்குநர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காமெடி படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கதையில் களமிறங்க திட்டமிட்டார். இந்த படமும் போன வருஷமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் படம் தள்ளிப்போயுள்ளதாம்.

அப்செட்டில் அழகான நடிகை
இந்த விடுமுறைக்கும் படம் வெளியாகாமல் தள்ளிப் போன செய்தி அறிந்த அழகான நடிகை கடும் அப்செட்டில் உள்ளாராம். ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது என்றும் புலம்பி தவிக்கிறாராம்.

டோலிவுட் பக்கம்
கோலிவுட்டில் கோல் போட முடியவில்லை டோலிவுட் பக்கம் அப்படியே நடையை கட்ட வேண்டியது தான் என திட்டம் போட்டு வருகிறாராம் அந்த அழகான நடிகை.

அங்கேயும் சிக்கல் தான்
ஏற்கனவே கோலிவுட்டில் வாய்ப்பில்லை என டோலிவுட் பக்கம் பல நடிகைகள் கரை ஒதுங்கியுள்ளதால், அங்கேயும் இந்த நடிகைக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் சிக்கல் தான் ஏற்பட்டு வருகிறது.

படு தோல்வி
கடந்த ஆண்டு அழகான நடிகை நடிப்பில் வெளியான அந்த தமிழான படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், புதிய பட வாய்ப்புகளும் அம்மணிக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே நடித்த அந்த போலீஸ் படம் வெளியானாலாவது புதிய வாய்ப்புகள் கிடைக்கிறதா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

கிளாமர் பக்கம்
பெரிய படங்களில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், கிளாமர் பக்கமும் முயற்சித்து தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய புதிய போட்டோஷுட்டும் நடத்தி வருகிறாராம்.

குத்தாட்டம் போடவும் ரெடியாம்
அதேபோல, பெரிய நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தாலும், ஓகே தான் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு தூதுவிட்டு வருகிறாராம் அந்த நடிகை. ஆனால், தற்போதெல்லாம் படத்தில் பாடல்களையே யாரும் ரசிப்பதில்லை. குத்தாட்டத்தை எல்லாம் யாரும் ரசிப்பதில்லை என அதற்கும் கேட் போட்டுட்டாங்களாம்.


Click it and Unblock the Notifications











