»   »  இந்த முறை கசிந்துவிடக் கூடாது… கவனமாக இருக்கும் இயக்குநர்!

இந்த முறை கசிந்துவிடக் கூடாது… கவனமாக இருக்கும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகரை வைத்து ஏற்கெனவே ஒரு படம் இயக்கியவர் இப்போது அடுத்த படத்தையும் இயக்கவிருக்கிறார். இதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நேற்றுதான் முடிந்தன.

போன படம் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தின் அதிகாரபூர்வமில்லாத ரீமேக் என செய்திகள் பரவின. அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே. இயக்குநர் ஆரம்பத்தில் இருந்தே மறுத்தாலும் படம் வெளியான பிறகு அதுதான் உண்மை என தெரிய வந்தது.

இந்த முறை அந்த மாதிரி எதுவும் நடந்துட கூடாது என்று ஹீரோ ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம். எனவேதான் கதையை செதுக்குவதற்கு கூட பிரபல இயக்குநரின் அப்பாவான திரைக்கதை ஜாம்பவானை அமர்த்தினார்கள். இயக்குநரின் அசிஸ்டெண்ட்கள் யாருக்குமே இதுவரை கதை தெரியாதாம்.

இவ்வளவு ரகசியம் காத்தாலும் இந்தக் கதையும் ஒரு பழைய படத்தில் இருந்து சுட்டதுதானாம். அதை தெரியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கத்தான் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது என்கிறார்கள். ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து இயக்குநரை தாங்கி பிடிக்குது. என்ன ஆகுமோ...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thalapathi’s next director taking so much care for his script not to be leaked due to severe criticism on his previous 2 movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil