வைரலாகும் பாட்டு.. வாய் திறக்காத இயக்குநர்.. எல்லாத்துக்கும் அந்த சம்பவம் தான் காரணமாம்!
சென்னை: மாஸ் நடிகரின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பாடல் குறித்து, அந்த காப்பி இயக்குநர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.
மாஸ் நடிகரின் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் அவரை மடக்கி இது குறித்து கேள்விகளை எழுப்பியும், அந்த இயக்குநர் வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஒரு சம்பவம் தான் என்கின்ற தகவல் கோலிவுட்டில் உலவி வருகிறது.

புட்டு வெளிப்பட்டுருச்சு
அந்த விளையாட்டு படத்தை பல படங்களில் இருந்து காப்பி அடித்த புட்டு வெளிப்பட்ட நிலையில், இதற்கு மேல், அந்த இயக்குநருடன் இணைந்து பணி புரிய போவதில்லை, என்ற முடிவை மாஸ் நடிகர் எடுத்துள்ளாராம். மேலும், தயாரிப்பு தரப்பை ஏமாற்றி, ஏகத்துக்கும் இவர் செய்த செலவு தான் சமீபத்திய பிரச்சனைக்கும் காரணமாம்.

செல்ஃபியும் காப்பி
தனது முதல் படத்தில் தொடங்கிய காப்பி அடிக்கும் விஷயம், பெரிய பட்ஜெட் படம் வரைக்கும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தனது மனைவியுடன் வெளியிட்ட புகைப்படமும், காப்பி புகைப்படம் என நெட்டிசன்கள் ஆதாரத்துடன், புகைப்படங்களை பதிவிட்டு, இதில் கூடவா காப்பி என பங்கமாக கலாய்த்துள்ளனர்.

எல்லாமே சும்மா
மாஸ் நடிகரின் தம்பி என்றும், தீவிர ரசிகன் என்றும் மேடைகளில் மட்டும் பேசி, கைதட்டுகளை வாங்கிக் கொள்ளும் அந்த இயக்குநர், சமீபத்தில், அந்த மாஸ் நடிகருக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சனை குறித்த விவகாரத்திலும், சத்தமே காட்டாமல் எஸ்கேப் ஆகி இருந்தார். போதா குறைக்கு, அந்த மாஸ் நடிகருக்கு வந்த பிரச்சனைக்கு முழு முதற் காரணமே இவர் தான் என்கிறார்கள்.

ஒரு சப்போர்ட்டும் இல்லை
மேலும், மதம் மாற்றுவதாக எழுந்த புகாரில் கூட, கண்டும் காணாமல் இருந்து வருகிறார் அந்த காப்பி இயக்குநர். வில்லனாக நடித்து வரும் அந்த ஹீரோ கூட துணைக்கு வந்து வாய்ஸ் கொடுத்துள்ள நிலையில், இவரை எங்கே காணோம் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.

மனப்பால்
கோலிவுட்டில் ஏமாற்றியது போதாது என்று, வட மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள உச்ச நடிகருக்கு, பல படங்களில் சுட்ட கதைகளை ஒன்று திரட்டி, கூறியுள்ள அந்த இயக்குநர், எப்படியாவது அந்த ஹீரோ மயங்கி ஓகே சொல்லிவிட்டால், இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என மனப்பால் குடித்து வருகிறாராம்.

வாய்ப்பில்லை ராஜா
தனக்கு சொன்ன கதை பிடித்திருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் அந்த இயக்குநர் குறித்து நன்கு விசாரித்து வருகிறாராம் அந்த பிரபல நடிகர். அந்த இயக்குநர் குறித்த செய்திகளும், தகவல்களும், தொடர்ந்து அவருக்கு எதிராகவே ரிப்போர்ட் செய்ய, அந்த படத்தை இயக்கவும் வாய்ப்புகள் கம்மி தான் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











