சோனமுத்தா இந்த தடவையும் போச்சா.. நம்பர் நாயகின்னு சொன்னாங்களே.. பாவம் அந்த காப்பி இயக்குநர்!

சென்னை: காப்பி இயக்குநருக்கு மறுபடியும் டாட்டா காட்டி உள்ளார் அந்த உச்ச நட்சத்திரம்.

ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய அந்த உச்ச நட்சத்திரம் காப்பி இயக்குநர் படத்தில் நடிப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதற்கு பதிலாக வேறு ஒரு பிரபல இயக்குநர் பெயரை மட்டுமே அறிவித்திருப்பது அந்த காப்பி இயக்குநருக்கு தர்ம சங்கடமாக மாறி உள்ளது.

குருவை மிஞ்சிய சிஷ்யன்

குருவை மிஞ்சிய சிஷ்யன்

தேவையில்லாமல் ரோடு, மலை, காடு என அனைத்துக்கும் சாயம் பூசியே தயாரிப்பாளர்களின் காசை கரியாக்குவதில் குருவையே மிஞ்சி விட்டார் அந்த சிஷ்யன். கடைசியாக அவர் எடுத்த படத்திலும் சொன்னதை விட அதிக பட்ஜெட்டை எகிற விட்டு தயாரிப்பாளர்களை தெருக்கோடியில் நிறுத்தி உள்ளார்.

சீன் பை சீன்

சீன் பை சீன்

ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு பிரபல படத்தில் இருந்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவதாக அந்த இயக்குநர் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். கோலிவுட்டில் அப்படி காப்பி அடித்து உருட்டியே டாப் இயக்குநராக மாறிய அவர் அடுத்ததாக வடமாநிலத்துக்கும் பறக்க திட்டமிட்டார்.

வாய்க்கு எட்டவில்லை

வாய்க்கு எட்டவில்லை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடந்த சில ஆண்டுகளாக வடநாட்டிலேயே முகாம் போட்டும் இன்னமும் அந்த நடிகரின் படத்தை இயக்கும் நல்ல நேரம் அந்த இயக்குநருக்கு வாய்க்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் உள்ளார் அந்த காப்பி இயக்குநர்.

இவரும் பிசி

இவரும் பிசி

சரி திரும்பி சென்னைக்கே வந்து மீண்டும் அந்த மாஸ் நடிகரிடம் ஐஸ் வைத்து இன்னொரு படத்தை பண்ணி விடலாம் என எண்ணினாலும், புதிய புதிய திறமைகளை தேடி நகர ஆரம்பித்து விட்டார் அந்த மாஸ் நடிகர். அதனால், எப்படியாவது அந்த நடிகரை கன்வின்ஸ் பண்ணி கால்ஷீட் வாங்கி விட துடித்துக் கொண்டிருக்கிறார்.

நம்பர் நடிகை

நம்பர் நடிகை

இதற்கு நடுவே ஏற்கனவே அந்த காப்பி இயக்குநர் படங்களில் சில முறை நடித்துள்ள அந்த நம்பர் நடிகையை வட நாட்டு நடிகருக்கு ஜோடி சேர்க்கப் போவதாகவும் கிசுகிசுக்களை கிளப்பி விட்டுள்ளனர். ஆனால், ஒட்டுமொத்தத்திற்கு ஆப்பு வைத்து விட்டார் அந்த உச்ச நடிகர்.

இப்போ இல்லை

இப்போ இல்லை

அந்த இயக்குநருடன் படம் பண்ண போறீங்களா என்கிற கேள்விகளை தவிர்த்து வந்த அந்த உச்ச நடிகர் இப்போதைக்கு தனது அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும், அந்த முட்டாள் பட இயக்குநருடன் கை கோர்க்க உள்ளது குறித்தும் குறிப்பால் உணர்த்தி உள்ள நடிகர் கடைசி வரை காப்பி இயக்குநரை கண்டுக்கவே இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X