காப்பி இயக்குநருக்கு கர்ச்சிப் போடும் பல்லழகன்.. என் ரேஞ்சே வேற என சீன் போடுறாராம் டைரக்டர்!
சென்னை: முதல் படத்தில் அந்த இயக்குநர் மீது யாருக்குமே நம்பிக்கை வராத நிலையிலேயே அந்த பல்லழகன் நடிகர் தான் நம்பி பட வாய்ப்பை கொடுக்க அவரது கரியரிலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி வந்தாலும், பிசினஸ் வேறு ஃபிரெண்ட்ஷிப் வேறு என்பதில் தெளிவாக இருந்து அந்த நடிகரை விலக்கி வைத்துக் கொண்டே இருக்கிறார் காப்பி இயக்குநர் என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

மாஸ் ஹீரோவுக்கு தொடர்ந்து படங்கள் செய்து வந்த நிலையில், அவரை விட மாஸான ஹீரோவை தேடிச் சென்ற இயக்குநர் முதல் பட ஹீரோ பலமுறை முயற்சி செய்தும் முடியவே முடியாது எனக் கூறி விட்டாராம்.
தமாஸ் ஹீரோவுக்கு டிமிக்கி: பார்க்கத்தான் டம்மி பீஸ் போல இருக்கும் அந்த இயக்குநர் மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் விஷயத்தில் படு கறாரான ஆள் என்பது அவருடன் நெருங்கி பழகும் வட்டாரத்திற்கு நன்றாகவே தெரியும் என்கின்றனர். பிரம்மாண்ட இயக்குநரிடம் அவர் வேலை பார்த்த போது தான் மார்க்கெட்டிங்கையே குருநாதருக்கு எப்படி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்து மாஸ் காட்டியவராம் அந்த காப்பி இயக்குநர்.
கதைக்கு யோசிக்கத் தேவையில்லை: எப்படி புதிதாக நாம சிந்திச்சு ஒரு படத்திற்கு கதை எழுதினாலும், உலக சினிமாவில் எங்கேயாவது அந்த கதை வந்திருக்கும். ஆனால், அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பது தான் பெரிய கேள்வி. அதனால், கதைக்கெல்லாம் பெரிதாக யோசிக்கவே வேண்டாம். ஒவ்வொரு சீனையும் எங்கே இருந்து சுட்டு சரியாக எடிட் செய்து ஒரு படத்தை உருவாக்கி வியாபார ரீதியாக வெற்றிப் பெறுகிறோமோ சினிமாவுக்கு அதுதான் தேவை என்றும் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தால், எந்த விமர்சனமும் நம்மை ஒன்றும் செய்யாது என்கிற ரூட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறாராம் அந்த இயக்குநர்.

பல்லழகனுக்கு பல்பு: ஒவ்வொரு முறையும் இயக்குநர் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் அவருடன் ஒட்டிக் கொள்ளும் அந்த பல்லழகன் தனக்கு ஒரு சின்ன படத்தை குயிக்கா செய்யலாமே ப்ரோ எனக் கேட்பாராம். ஆனால், இப்போதைக்கு என் ரேஞ்சே வேற பெரிய நடிகர்களை இயக்க போயிட்டேன். இனி திரும்பி வந்து சின்ன ஹீரோக்களை வைத்து படம் பண்ணா நல்லா இருக்காது பாஸ், வேண்டுமென்றால் என் உதவி இயக்குநரை வைத்து உனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்றேன் என நைஸாக கழட்டி விட்டுட்டாராம்.
தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆகி வருவதால் காப்பி இயக்குநரிடம் உதவி கேட்கப் போய் கடைசியில் பல்பு வாங்கியது தான் மிச்சம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











