அம்புட்டும் போச்சா.. காப்பி இயக்குநர் பெட்டியை தூக்கி பழைய இடத்துக்கே வந்து சேர இதுதான் காரணமா?
சென்னை: கோலிவுட்டில் இருந்து பல கனவுகளுடன் பாலிவுட்டுக்கு பறந்து சென்ற காப்பி இயக்குநரின் மொத்த கனவையும் அந்த உச்ச நட்சத்திரம் சுக்கு நூறாக ஆக்கி விட்டாராம்.
பிரம்மாண்டத்தின் சிஷ்யனான அந்த இயக்குநர் இயக்கிய படங்கள் அனைத்துமே பழைய படங்களின் தழுவல் படங்கள் தான் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
ஆனால், அவை அனைத்தும் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் தான் எந்த படத்தையும் காப்பி செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்து தொடர்ந்து தனது சினிமா வேலையை பார்த்து வருகிறார்.

சென்னையில் கிடைத்த சந்திப்பு
கோலிவுட்டில் மாஸ் நடிகரை வைத்து ஒரு படம் எடுத்தாலே அவர் டாப் இயக்குநர் ஆகி விடுவார். தொடர்ந்து, மூன்று படங்களை இயக்கிய அந்த இளம் இயக்குநருக்கு விளையாட்டு போட்டியின் போது பாலிவுட் நட்சத்திரத்தை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்ததும், அதனை நழுவ விடாமல் அப்படியே ஒரு சுட்ட கதையை சுடச் சுட சொல்ல அந்த உச்ச நடிகர் ஓகே சொல்லி விட்டாராம்.

ஏகப்பட்ட அட்வைஸ்
ஆனால், சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் எந்த படமும் ஓடாமல் இருப்பதால், இதற்கு மேல் தேர்வு செய்யும் படங்களை சொதப்பாமல் சரியாக செய்தால் தான் டோலிவுட் நடிகர்கள் எல்லாம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கால் மேல் கால் போட்டு உட்கார மாட்டார்கள் என ஓசி அட்வைஸ் கிடைத்ததும் அந்த இயக்குநர் படத்தை ஒதுக்கி வைத்து விட்டு இன்னொரு படத்தில் நடிக்க ஆயத்தமானார்.

கால்ஷீட்டே இல்லை
ஆரம்பத்தில் காப்பி இயக்குநருக்கு ஓகே சொல்லி அவருக்கு ஒதுக்கிய கால்ஷீட்கள் எல்லாமே தனது மகனின் தேவையில்லாத பழக்கத்தால் வந்த சிக்கல்கள் காரணமாக காலியாகி விட்டன. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என தொடர்ந்து அந்த இயக்குநரை ஓரங்கட்டி வந்த அந்த நடிகர் தற்போது பெரிய வெடிகுண்டையே தலையில் போட்டு விட்டாராம்.

படம் டிராப்
இப்போது நடித்து வரும் படத்தை முடித்து விட்டு தன்னுடைய படத்துக்கு அந்த உச்ச நடிகர் கால்ஷீட் தருவார் என இளவு காத்த கிளியாக காத்திருந்த அந்த இயக்குநர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி சார் ரொம்ப வருஷம் வெட்டியாவே இருந்துட்டேன், எப்போ தான் சார் நம்ம படத்துக்கு வருவீங்க என கேட்டதும், கடுப்பான அந்த நடிகர் படத்தை டிராப் பண்ணி விட்டதாக பரபரப்பான தகவல்கள் பாலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றன.

பாவம் நம்பர் நடிகை
இவரை நம்பி பாலிவுட் ஆசையுடன் சென்ற அந்த நம்பர் நடிகைக்கும் ஆரம்பத்திலேயே எண்ட் கார்டு போடப்பட்ட நிலையில், அவரும் காப்பி இயக்குநர் மேல் கடும் கோபத்தில் உள்ளாராம். ஏற்கனவே விருது நடிகை பாலிவுட் பக்கம் செல்ல தன்னையே டேமேஜ் செய்து கொண்டு மார்க்கெட்டை இழந்த நிலையில், நம்பர் நடிகைக்கும் பாலிவுட் கனவு பொய்யாக போய் விட்டதே என்று அவரும் புலம்பி வருகிறாராம்.

கை விரித்த மாஸ் நடிகர்
மீண்டும் கோலிவுட்டுக்கே பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு திரும்பிய இயக்குநருக்கு மாஸ் நடிகர் கை கொடுப்பார் என ரொம்பவே எதிர்பார்த்த நிலையில், இப்போதைக்கு டேட் இல்லை, இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு வாங்க தம்பி பார்க்கலாம் என அவரும் கை விரித்ததால் இளம் நடிகர்களுக்கு கதை சொல்லி வருகிறாராம் அந்த காப்பி இயக்குநர்.


Click it and Unblock the Notifications











