கிரிக்கெட் வீரரையே மடக்கிப் போட்ட நம்பர் நடிகை.. திரும்பிய பக்கம் எல்லாம் ஒரே யோகம் தான் போங்க!

By Staff

சென்னை: நம்பர் நடிகையின் காதலர் அந்த கிரிக்கெட் வீரரின் வெறிப்பிடித்த ரசிகர் என்றால், அந்த கிரிக்கெட் வீரர் நடிகையின் ரசிகராகவே மாறி விட்டாராம்.

ஏற்கனவே நம்பர் நடிகை நடித்த பல படங்களை பார்த்துள்ள அந்த கிரிக்கெட் வீரர் சமீபத்தில் காதலர் இயக்கிய படத்தில் நடித்ததை பார்த்து ரொம்பவே பிடித்துப் போனதாம்.

சமீபத்தில், அவரை போன் செய்து பாராட்டிய நிலையில், உடனடியாக அந்த கிரிக்கெட் வீரரையும் சினிமா பக்கம் இழுத்து வந்து விட்டாராம் நம்பர் நடிகை.

சினிமா பிசினஸ்

சினிமா பிசினஸ்

சினிமாவில் நடிப்பதை தாண்டி சினிமா பிசினஸை நன்றாக கற்றுத் தேர்ந்திருக்கிறார் நம்பர் நடிகை. சமீப காலமாக தங்களது பேனரில் உருவாகும் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களாக இருக்கும் நிலையில், தான் நடிக்கும் படங்கள் பெரிய பட்ஜெட்டில் பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

காதலருக்கு வாய்ப்பு

காதலருக்கு வாய்ப்பு

அப்படித்தான் சமீபத்தில் அந்த பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் டாப் நடிகரை வைத்து புதிய படத்தை இயக்க காதலருக்கு அட்டகாசமான ஒரு வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருந்தார் நம்பர் நடிகை. மேலும், அந்த படத்தில் தனக்கு ஈடாக காதலருக்கும் அதே சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்கிற டீலிங்கையும் பேசி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருந்தார்.

சிக்கிய கிரிக்கெட் வீரர்

சிக்கிய கிரிக்கெட் வீரர்

வயதாகி வருவதால் கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பிரபல கிரிக்கெட் வீரர் தற்போது சினிமா பக்கம் தனது ஆர்வத்தை முழுமையாக செலுத்தி வருகிறார். ஏற்கனவே காதலர் அந்த கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகர் என்பதால் அவரை அழகாக மடக்கிப் போடும் திட்டத்தில் நம்பர் நடிகைக்கு வெற்றிக் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகையின் ரசிகர்

நடிகையின் ரசிகர்

அந்த கிரிக்கெட் வீரரும் நடிகையின் தீவிர ரசிகர் என்கிற உண்மையை போட்டு உடைத்த நிலையில், உடனடியாக நீங்கள் ஏன் தயாரிப்பில் இறங்கக் கூடாது என நடிகை பேசிய பிசினஸ் பேச்சு வேறலெவலில் வொர்க்கவுட் ஆகி உள்ளதாம். விரைவில் தயாரிப்பு கம்பெனியை தொடங்கப் போகும் அந்த கிரிக்கெட் வீரர் நம்பர் நடிகையையே முன்னணி ஹீரோயினாக நடிக்க வைக்கப் போகிறாராம்.

இயக்குநர் அவர் தானே

இயக்குநர் அவர் தானே

கிரிக்கெட் வீரர் தயாரிக்கும் அந்த படத்தில் நடிகை நடிக்க உள்ள நிலையில், அவரது காதலே படத்தை இயக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் நம்பர் நடிகைக்கு அதிர்ஷ்ட காத்து வீசி வருவது கும்பிட்ட தெய்வம் கைவிடாது என்பதை நிரூபிப்பதாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X