பல கோடி வீணானது தான் மிச்சம்.. மனக்குமுறலில் மாஸ் நடிகர்.. எல்லாத்துக்கும் காரணம் ரைட் ஹேண்ட் தானா?

By Staff

சென்னை: எப்படியாவது தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றிக் கனியை ருசித்து விடலாம் என மாஸ் நடிகர் போட்ட கணக்கு எல்லாம் தமாஸாக மாறிவிட்டது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆரம்பத்திலேயே மாஸ் நடிகரை க்ளீன் போல்ட் செய்துவிட பெரும்புள்ளி பக்காவாக பிளான் போட்டு சினிமா பிரபலங்கள் முதல் பல பிரபலங்களையும் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

கோடிக் கணக்கில் செலவு செய்ய ரெடியாக இருந்தால் வெற்றியை உங்களுக்கு உடனடியாக ரெடி பண்ணித் தருகிறேன் என புஷ்பா பட சீன் போல சீன் போட்ட ரைட் ஹேண்ட் தான் அனைத்து பஞ்சாயத்துக்கும் காரணம் என்கின்றனர்.

Crores Burned Career at Risk Mass Hero Breaks Down Is His Right-Hand Man Behind the Disaster

மாஸ் நடிகர் நம்பியவர்கள் எல்லாம் டெரர் பீஸாக இருப்பார்கள் என பார்த்தால் வெறும் டம்மி டப்பாசாகவே உள்ள நிலையில், எல்லா பக்கமும் மாஸ் நடிகருக்கு நெருக்கடியான சூழல் தான் நிலவுவதாகவும் அனைத்தையும் அனாலைசிஸ் பண்ணி தப்பு எங்கே இருக்கிறது என்பதை சரிபார்க்க அவர் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

ஒருவருக்கு மட்டுமே நல்ல எண்ணம்: ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நினைத்து பல தடைகளை தாண்டி தொடர்ந்து நிற்கும் மாஸ் நடிகருக்கு மட்டுமே எப்படியாவது வெற்றிப் பெறவேண்டும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகவும், அவரை சார்ந்துள்ள அனைவரும் எந்தளவுக்கு இவரிடம் இருந்து பணத்தை கறக்க முடியுமோ அந்தளவுக்கு கறந்துவிட்டால் போதும் என்கிற மைண்ட் செட் மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர்.

கோடிக்கணக்கில் காசு காலி: புதிய திட்டத்தை ஆரம்பித்து ஒவ்வொரு விஷயத்துக்கும் கோடிக்கணக்கில் காசை அள்ளி செலவு செய்து வருகிறாராம் மாஸ் நடிகர். செய்ய வேண்டிய விஷயங்களை தாண்டி தேவையற்ற தவறுகளுக்காகவும் தண்டம் அழவேண்டி இருப்பது தான் நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது என்கின்றனர்.

டக் அவுட் ஆகப்போகிறோமா?: முதல் பந்திலேயே மாஸ் நடிகரை முடித்து விட பழம் தின்னுக் கொட்டைப் போட்ட பெரும்புள்ளி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் நிலையில், டக் அவுட் ஆகப்போகிறோமா? என்கிற சந்தேகமே மாஸ் நடிகருக்கு வந்துவிட்டதாம். அவர் நம்பி காத்திருந்த பலரும் தங்களுக்கான சேஃப்டி தான் முக்கியம் என்பதில் காரியக் கண்ணாக இருப்பதால் நடிகரின் நம்பிக்கை நாளுக்கு நாள் நொறுங்கிக் கொண்டே வருகிறது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X