காதலனுக்கு செக் வைத்த கொழு கொழு நடிகை.. ஓட்டலில் நடந்த கைகலப்பு..வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

By Staff

சென்னை: கொழு கொழு நடிகை பிரகாசமான நடிகரை காதலித்துக்கொண்டு இருந்த போதே மாஸ் நடிகருடன் உறவில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கடதேசத்து நடிகையான இவர், பெரிய இயக்குநர் ஒருவரின் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

முதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கொழு கொழுக் என்று இருந்ததால், படவாய்ப்பு இவரை தேடி வந்தது.

cute actress who was in a relationship with a mass actor while still in love with a vaarisu actor

காதலில் விழுந்த கொழு கொழு நடிகை: முதல் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பிரகாசமான நடிகரை காதலித்தார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், காலப்போக்கில் அது காதலாக மாறியது. இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி, பிரகாசமான நடிகரின் அப்பாவின் காதுக்கு சென்றால், குடும்பத்திற்குள் ஒரே பிரச்சனை. அந்த நடிகையை காதலித்தால், குடும்பமானமே போய்விடும் என்றும், உனது சினிமா வாழ்க்கையும் போய்விடும் என்று அப்பா அடுக்கடுக்காக அட்வைஸ் கொடுக்க ஆடிப்போன பிரகாசமான நடிகர் நடிகையை கழட்டி விட முயற்சி செய்துள்ளார்.

மாஸ் நடிகருடன் கைகலப்பு: இதனால் கடுப்பான கொழு கொழு நடிகை காதலனுக்கு செக் வைக்க, தன்னுடன் இணைந்து நடித்த மாஸ் நடிகருடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். ஒரு படம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து மாஸ் நடிகரின் படத்தில் கமிட்டாகி பிரகாசமான நடிகரை கடுப்பேத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் கொழு கொழு நடிகை மாஸ் நடிகருடன் ஹோட்டலில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பிரகாசமான நடிகர், நடிகைக்கு போன் செய்து சரமாரியாக திட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் நேரடியாக ஹோட்டலுக்கே வந்து, மாஸ் நடிகரை வெளுத்து வாங்க, ஒரு கட்டத்தில் அது கைகலப்பு வரை சென்றது.

மாஸ்டர் பிளான்: காதலி என்னத்தான் வரம்புமீறி நடந்து கொண்டாலும், பிரகாசமான நடிகர் அவரை உயிருக்கு உயிராக காதலித்ததால், கட்டுனா அவளைத்தான் கட்டுவேன் என்று அப்பாவிடம் பெரிய பிரச்சனை செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மகன், இனி தன்பேச்சை கேட்கமாட்டான் என முடிவு செய்த அப்பா, எப்படியோ போ என சில கன்டிஷனோடு ஊரை அழைத்து திருமணமும் வைத்து வைத்தார். அந்த கன்டிஷனை சில ஆண்டுகள் கேட்ட கொழு கொழு நடிகை மீண்டும் அதை மீறியது மட்டுமில்லாமல், கணவரை கைக்குள் போட்டுக்கொண்டு தனக்கு வேண்டியதை கனகச்சிதமாக செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X