»   »  4 கோடி தாங்க... படக்குழுவினரை அதிரவைத்த அழகான வில்லன்

4 கோடி தாங்க... படக்குழுவினரை அதிரவைத்த அழகான வில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இவர் மாதிரி மாப்பிளை வேண்டும் என்று பெண்களை ஏங்க வைத்த அந்த அழகான நடிகர் நீண்ட வருடம் கழித்து ஜெயமான நாயகனின் படத்தில் அலட்டிக் கொள்ளாத வில்லனாக நடித்திருந்தார்.

படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது இதனால் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க நடிகர் ஆர்வம் காட்டி வந்தார்.

ஜெயமான நாயகனுடன் நடித்த அந்தப் படம் தற்போது ஏனைய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதில் தெலுங்கு மொழியில் இந்தப் படத்தில் நடிக்க வில்லன் நடிகரை அணுகியிருக்கின்றனர்.

நடிகரும் சம்மதித்து இருக்கிறார் ஆனால் நடிகர் கேட்ட சம்பளம் படக்குழுவினரை தங்களின் முடிவில் இருந்து பின்வாங்க வைத்திருக்கிறது.

அப்படி எவ்வளவுதான் கேட்டார் என்று கேட்கிறீர்களா நாயகன் வேடத்துக்கு இணையாக 4 கோடிகளை கேட்டு அதிரவைத்திருக்கிறார்.

இதனைக் கேட்டு தெலுங்கு தேசத்தினர் பின்வாங்கினாலும் நடிகர் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. தற்போது இயக்குனர்கள் பலரும் இந்த அழகான வில்லனை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டா போட்டி நடத்துகின்றனர்.

இதனால் தான் வில்லன் நடிகர் கறாராக சம்பளத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் வாய்ப்புகள் பறிபோனாலும் கூட கலங்காமல் தான் கேட்கும் சம்பளத்தை கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற முடிவில் இருக்கிறாராம் இந்த அழகான வில்லன்.

English summary
The Lighthearted Villain Actor ask Huge Amount Salary in his Latest Movie, the film Crew to Retreat from their decision.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil