'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்
சென்னை: அண்ணாவின் பெயரை கெடுக்க அவர் அப்பாவே போதும் என்று லீடர் நடிகரின் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
லீடர் நடிகருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது. அதற்காக வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மெதுவாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவரின் தந்தை அவ்வப்போது பேட்டிகளில் எதையாவது சொல்லி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

விருப்பம்
என் மகன் முதல்வராக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதில் தப்பு இல்லை. அவர் இந்த நாட்டில் முக்கியமான ஆளாக வர வேண்டும் என விரும்புகிறேன் என்று லீடர் நடிகரின் தந்தை தெரிவித்தார்.

அப்பா
நடிகரே அடக்கி வாசிக்கும்போது அவர் அப்பா ஏன் தேவையில்லாமல் பேசுகிறார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அவர் அளித்துள்ள மேலும் ஒரு பேட்டியால் லீடர் நடிகரின் ரசிகர்களே கடுப்பாகியுள்ளனர்.

படம்
அண்மையில் வெளியான உச்ச நடிகரின் படத்தை விட தனது மகன் நடித்த நான்கு எழுத்து படமே சிறந்தது என்று தந்தை தெரிவித்துள்ளார். இது உச்ச நடிகரின் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

பேட்டிகள்
லீடர் நடிகரின் இமேஜை கெடுக்க வேறு யாருமே வேண்டாம் அவரின் தந்தை மட்டுமே போதும் என்று பேசத் துவங்கிவிட்டனர். தந்தையோ மகன் மீதுள்ள பாசத்தில் பேசுகிறேன் என்று எதையாவது படக்கென்று கூறிவிடுகிறார். ஆனால் அது லீடரின் இமேஜை டேமேஜ் செய்யும்படி அமைந்துவிடுகிறது. மகன் சொல்லாமலா அப்பா இப்படி பேசுவார் என்று சிலர் சிரிப்பதற்கு வழிவகை செய்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications











