மகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்?
Recommended Video

சென்னை: மீண்டும் எடுக்கப்படும் வாரிசு நடிகரின் படப்பிடிப்புக்கு ஆகும் செலவை யார் ஏற்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரின் மகன் தந்தை வழியில் ஹீரோவானார். அவரின் முதல் படத்தை அப்பா நடிகருக்கு ராசியான இயக்குநர் எடுத்தார். படத்தை எடுத்து முடித்த பிறகு நன்றாக இல்லை என்று கூறி மீண்டும் எடுக்கிறோம் என்று அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.
இதையடுத்து இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்டோரை மாற்றி ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகன் நடிகர் மரணமாக உள்ளார். படத்தின் தலைப்பையும் மாற்றிவிட்டனர். போஸ்டரை சட்டென்று பார்த்தால் அது மகன் நடிகர் தான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆளே மாறிப்போயுள்ளார்.

அப்பா நடிகர்
படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. தெலுங்கில் இருந்து வரும் இயக்குநர் இந்த படத்தை எடுக்கிறார். படத்தை மீண்டும் எடுக்க ஆகும் செலவை அப்பா நடிகர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

படம்
பிரபல இயக்குநர் படத்தை எடுத்து முடித்து போட்டுக் காட்டியபோது தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் பிடிக்கவில்லை. அதனால் தயாரிப்பு நிறுவனம் தான் மீண்டும் படத்தை எடுக்க முடிவு செய்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அப்பா நடிகர் பணம் தருகிறார் என்று பேச்சு கிளம்பியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது நடிகை
மீண்டும் எடுக்கப்படும் படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகைக்கு பதில் பிரியமான நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படமாவது நல்ல படியாக வந்து ரிலீஸானால் நல்லது என்கிறார்கள் அப்பா நடிகரின் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications










