அப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது?
Recommended Video

சென்னை: சங்கத் தலைவரை அப்பா நடிகர் கழுவிக் கழுவி ஊத்துகிறார், மகன் நடிகரோ புகழ்ந்து தள்ளுகிறார்.
பல திறமை கொண்ட அந்த வாரிசு நடிகர் சங்கத் தலைவரை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தார். தற்போது ஆளே மாறிப் போன அவர் சங்கத் தலைவருடன் நட்பு பாராட்டத் துவங்கிவிட்டார்.
கட்டிப்பிடித்து செல்ஃபி எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

அப்பா
மகன் சங்கத் தலைவருடன் செல்ஃபி எடுத்த சில நாட்களிலேயே அவரை அப்பா நடிகர் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளார். தனக்கே உரிய அடுக்குமொழி ஸ்டைலில் சங்கத் தலைவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.

துப்பறிவாளன்
ஆம்பளன்னு படத்தில் நடித்தால் மட்டும் போதுமா, நீ என்ன பெரிய துப்பறிவாளனா என்று எல்லாம் அப்பா நடிகர் சங்கத் தலைவரை பிரஸ் மீட்டில் வைத்தி கிழி கிழின்னு கிழித்தார்.

புகழ்ச்சி
அப்பா நடிகர் கழுவி ஊத்திய கையோடு மகன் நடிகர் சங்கத் தலைவரை நிகழ்ச்சி மேடை ஒன்றில் பாராட்டிப் பேசியுள்ளார். மகன் நடிகர் பேசியதை கேட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பேச்சு
அப்பாவும், மகனும் இப்படி பேசுவது பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. அப்பா திட்டுகிறார், மகன் பாராட்டுகிறார் ஒரே குழப்பமாக இருக்கே என்கிறார் கோலிவுட்காரர்கள்.

சமாதானம்
மல்லுக்கு பாய்ந்த மகன் நடிகர் தற்போது ரொம்பவே மாறிவிட்டார். சாந்தி, சமாதானம், அன்பு, அமைதி என்று பேசிக் கொண்டிருக்கிறார். என்னவோ போங்கப்பா.


Click it and Unblock the Notifications