»   »  காதலியோட வாழ்க்கையைத் தான் ஆட்ட நடிகர் படமா எடுக்குறாராமே?

காதலியோட வாழ்க்கையைத் தான் ஆட்ட நடிகர் படமா எடுக்குறாராமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்ட நடிகரின் பேய்ப்படத்தில் அவரது முன்னாள் காதலியை சம்பந்தப்படுத்தி காட்சிகள் வைத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நடனத்தில் தொடங்கி பல்வேறு அவதாரங்களையும் எடுத்த நடிகர் தற்போது பேயை மையமாகக் கொண்ட படமொன்றில் நடித்து வருகிறார்.

Dance Actor Movie in Ex Girlfriend's Life

இதில் நடிகருக்கு ஜோடியாக பால் நடிகை நடித்து வருகிறார். நடிகரின் பெயரைக் கொண்ட இயக்குநர் இப்படத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இயக்கி வருகிறார்.

இதில் பால் நடிகை, நடிகையாகவே நடித்து வருகிறாராம். ஆனால் பால் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் நடிகரின் முன்னாள் காதலியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

கிட்டதட்ட திருமணம் வரை வந்து இவர்கள் இருவரின் காதலும் நின்று போனது ஊரறிந்த விஷயம். காதல் முறிவால் நடிகர் வடக்கே சென்று அங்கு வெற்றிக் கொடி நாட்ட, நடிகை இங்கிருந்தே வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

காதல் முறிவிற்குப் பின் நடிகை, நடிகருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் உண்டு தனது படங்கள் உண்டு என்று வாழ்ந்து வருகிறார்.

அப்படி இருக்கும்போது நடிகர் இப்படி செய்யலாமா? என்று கோலிவுட்டில் ஆதங்கப்படுகின்றனர்.

English summary
Sources Said Dance Actor Ghost Movie Related Ex Girl Friend's Life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil