விவாகரத்திற்கு பின் ரகசிய உறவில் இருந்த டான்ஸ் நடிகை.. அதுவும் யாருடன் தெரியுமா?

By Staff

சென்னை : விவாகரத்திற்கு பின்னும் முக்கிய பிரபலம் ஒருவருடன் டான்ஸ் நடிகை ரகசிய உறவில் இருந்தார்.

முன்னணி நடிகையான இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த டான்ஸ் நடிகைக்கு இப்போது படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

Dance actress secret relationship with political celebrity

கதாநாயகியாக : திறமையான நடிகையான இவர் சினிமாவிற்கு நடிக்க வரும் போதே, நடனம், பாடல் என அனைத்திலும் கை தேர்ந்தவராக இருந்தார். இவரிடம் இருக்கும் திறமையைப் பார்த்து வியந்து போன பிரபல இயக்குநர் ஒருவர், கிராமத்து கதை அம்சம் கொண்ட ஒரு படத்தில், டான்ஸ் நடிகையை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

தொழிலதிபருடன் திருமணம் : முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வெற்றி பெற்றதை அடுத்து டான்ஸ் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கு என பல படங்களில் டாப் நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துக்கொண்டிருந்த டான்ஸ் நடிகை, பிரபலமாக இருக்கும் போதே தொழிலாதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

Dance actress secret relationship with political celebrity

கணவனை பிரிந்தார் : திரும்பிய பக்கம் எல்லாம் வேலை செய்வதற்கு ஆள் என்று ராணியைப் போல் இருந்த டான்ஸ் நடிகைக்கு வெளிநாட்டு வாழ்க்கை செட் ஆகவில்லை. இதனால், வெளிநாட்டுக்கு போன வேகத்திலேயே கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று திரும்பி வந்து மீண்டும் நடிக்க தொடங்கினார். திருமணத்திற்கு முன் டாப் நடிகையாக இருந்த அந்த டான்ஸ் நடிகைக்கு விவாகரத்துக்கு பின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்பு வரவில்லை. இருந்தாலும் காத்திருந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.

பிரபலத்துடன் ரகசிய உறவு : மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிய டான்ஸ் நடிகைக்கு அரசியல் பிரபலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது உறவாக மாறியது. இந்த விவகாரம் குறித்து கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி பத்திரிக்கையில் வந்த போதும், டான்ஸ் நடிகை எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவே இல்லை. இதன் பின் டான்ஸ் நடிகையின் மார்க்கெட் மளமளவென சரிந்து இருக்கும் இடமே தெரியாமல் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் டான்ஸ் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X