தன்னை விட ரொம்ப சின்னப்புள்ளையான தங்கச்சி நடிகையை காதலிக்கும் ரப்பர் பாடி
சென்னை: ரப்பர் பாடிக்கும் தங்கச்சி நடிகைக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாம்.
நடனம் ஆடுவதற்கு பெயர் போன அந்த ரப்பர் பாடிக்காரர் படங்களில் நடிப்பதோடு தயாரிக்கவும், இயக்கவும் செய்கிறார். மனிதருக்கு 40 வயதுக்கு மேல் ஆகியும் மவுசு குறையவில்லை.
அவர் நடனமாடினால் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.

காதல்
விலங்கின் பெயர் கொண்ட படத்தில் ஹீரோயினை விட தங்கச்சியை தான் பலரும் பாராட்டினார்கள். அந்த தங்கச்சி நடிகை தற்போது ரப்பர் பாடிக்காரரை காதலிக்கிறாராம்.

வயசு
ரப்பர் பாடிக்கும், தங்கச்சி நடிகைக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம். இருப்பினும் அதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது தான் காதலில் விழுந்துவிட்டார்களாம்.

கிசுகிசு
ரப்பர் பாடி மனைவியை பிரிந்து பெரிய நடிகை ஒருவரை காதலித்தார். அதன் பிறகு வடக்கே ஒரு நடிகையுடன் அவர் பெயர் அடிபட்டது. பின்னர் செவத்த புள்ளையுடனும் காதல் என்று கூறப்பட்டது. மேலும் ஒரு இளம் நடிகையுடனும் அவர் பெயர் அடிபட்டது.

திருமணம்
இந்த காதலாவது திருமணம் வரை போகுமா இல்லை பாதியில் முடிந்து அடுத்த காதல் துவங்குமா என்று தெரியவில்லையே என ரப்பர் பாடியின் ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











