ரெண்டு மாசத்துக்கு நோ ஃபங்ஷன்... முடிவெடுத்த வாரிசு நடிகை!
உடம்பு குண்டாகத் தெரியும் படங்கள் வெளியானதால் பெரும் சிக்கலுக்குள்ளான நடிகை இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெளியில் வராமல் உடம்பைக் குறைக்க முடிவெடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலக நடிகரின் வாரிசு குண்டாக இருக்கும் படங்கள் வெளியாகின. முக்கியமாக நடிகை படம் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பதால்தான் குண்டாகி விட்டார் என்று வந்த செய்திகள் நடிகையைக் கடுப்பாக்கி விட்டதாம்.
எனவே அந்த செய்தியை மாற்ற பழைய படங்களை வெளியிட்டு வருகிறார். இரண்டு மாதங்கள் கடும் உடற்பயிற்சி செய்து உடலை திரும்ப ஸ்லிம்மாக்க முயற்சி எடுத்து வருகிறார்.
அந்த இரண்டு மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள போவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications