எக்ஸ் மனைவிக்கு கிடைச்ச மாஸ்.. நமக்கு கிடைக்கலயே.. வேதனையில் புலம்புறாராம் அந்த ஹீரோ!

By Staff

சென்னை: புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, மனைவி பாலிவுட்டில் சாதித்து விட்டார் என்று தானும் பாலிவுட் பறக்க நினைத்த அந்த நடிகருக்கு கிடைத்ததோ கிழிந்து போன அந்த ஜட்டி மட்டும் தான் என ட்ரோல்கள் பறக்கின்றன.

இதன் காரணமாக படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருகிறார் அந்த ஹீரோ.

படம் வெளியானதும் பாருங்க எல்லாரும் என் சொந்த வாழ்க்கையை பத்தி பேசாமல், என் நடிப்பை பற்றி பேசுவாங்கன்னு சொன்ன மானஸ்தனை எங்கே காணோம் என நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், மனவேதனை அடைந்துள்ளாராம் அந்த நடிகர்.

சகவாசம் சரியில்லை

சகவாசம் சரியில்லை

தனது மனைவியை பிரிந்த அந்த நடிகரின் சகவாசத்தால் தான் இவரும் அந்த முடிவுக்கு வந்தார் என அந்த பாலிவுட் நடிகையே ஓப்பனாக விளாசும் அளவுக்கு நடிகரின் பிரச்சனை பெரிதாக வெடித்தது. தன்னை விட தனது மனைவி வளர்வது பிடிக்காமல் எழுந்த பிரச்சனை தான் சண்டையாக மாறி இருவரும் பிரியவே காரணம் என்கின்றனர்.

மனைவி மாஸ்

மனைவி மாஸ்

கணவருக்கு முன்பாகவே அந்த ஃபீல்டில் காலடி எடுத்து வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் தனது நடிப்புத் திறமையை பார்த்து அசந்து போக செய்து பக்கா மாஸ் காட்டினார் மனைவி. அதே போல ஒரு கதாபாத்திரம் கிடைக்கவே நடிகரும் வாயை தொங்க போட்டுக் கொண்டு ஓகே சொல்லி உள்ளார். ஆனால், அவருக்கு கிடைத்ததோ மாஸுக்கு பதில் தமாஸ் ஆன ரோல்.

கேவலப்படுத்திட்டாரு

கேவலப்படுத்திட்டாரு

ஒரிஜினல் படத்திலாவது கொஞ்ச நேரமே வந்து செல்லும் அந்த காமெடி கதாபாத்திரத்திற்கு நல்ல ரோல் இருந்திருக்கும். ஆனால், இங்கே இந்த ஹீரோவை முழு நேர காமெடியனாகவும் தென்னிந்திய நடிகரை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டி விட்டார் அந்த நடிகர் என குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கோலிவுட் நடிகர் கவனமாக இதற்காகத்தான் தவிர்த்து விட்டார் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

டிசாஸ்டர்

டிசாஸ்டர்

பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கினால் மட்டும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே படம் வொர்த்தாக இருந்தால் தான் பார்ப்பார்கள் என்பதை பாடம் புகட்டி மிகப்பெரிய டிசாஸ்டராக இந்த படத்தை மாற்றிய நிலையில், கண்ட கனவெல்லாம் வீணாப் போச்சே என அந்த நடிகர் புலம்பி வருகிறாராம்.

எக்ஸ் ஹேப்பி

எக்ஸ் ஹேப்பி

அந்த பெரிய நடிகரின் படத்தில் நடித்து, எங்கே நம்மை விட டாப்பில் வந்து விடப் போகிறார் என நினைத்துக் கொண்டிருந்த அந்த நடிகை, படத்தின் ரிசல்ட்டை பார்த்து படு ஹேப்பியாகி உள்ளார். படம் வெளியானதுக்கோ, எக்ஸ் நடித்ததற்கோ எந்தவொரு வாழ்த்தையும் அவர் சொல்லாத நிலையில், இப்போ மறைமுகமாக வெறுப்பேற்றி வருகிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X