ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!

By Staff

சென்னை: இளம் நடிகை சினிமாவில் பெரியளவில் வலம் வருவோம் என்கிற கனவுகளுடன் சில பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், தலைகால் புரியாமல் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டாராம். ஆனால், ஒரே வருஷத்தில் அவருக்கு ஒட்டுமொத்தமாக சினிமா கதவு ஒரேயடியாக சட்டென மூடிய நிலையில், ரொம்பவே டிப்ரெஷன் ஆகி விட்டார் எனக் கூறுகின்றனர்.

மன அழுத்தம் காரணமாக தவறான முடிவையே எடுக்க பார்த்த நடிகைக்கு கடைசி நேரத்தில் திறந்த அந்த கதவு காரணமாக தற்போது மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

Depressed actress who ready to quit her life finally get movie chance

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுடன் ஆயிரக் கணக்கில் பலரும் சினிமா துறைக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே சான்ஸ் கிடைத்து வருகிறது.

குவிந்த பட வாய்ப்புகள்: அந்த இளம் நடிகைக்கு வரிசையாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு படம் ரிலீஸ் ஆகி விட்டால் கூட நம்மோட நடிப்பு நல்லா இல்லைன்னு அதன் பின்னர் ஓரம் கட்டிடுவாங்களோ என்கிற நினைப்பில் ஒரே அடியாக பல படங்களை கமிட் செய்து வந்தார். அந்த பெரிய படத்தில் நடிக்கிறேன். அந்த பிரபல ஹீரோவுடன் நடிக்கிறேன் என அடுத்தடுத்த பட வாய்ப்புகளை நடிகை புக் செய்து ஏமாற்றியது ஒரு கட்டத்தில் அம்பலமாகி விட்டதாம்.

ஒரே வருஷத்தில் எல்லாம் போச்சு: ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது என்பது போல அந்த நடிகைக்கு அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகள் அப்படியே நின்று போய் விட்ட நிலையில், ஒரே டென்ஷனாகி விட்டாராம். எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை பிடித்து விடலாம் என நடிகை பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லையாம். இதனால், மனம் உடைந்து நொந்து போய்விட்டாராம் அந்த நடிகை.

தவறான முடிவு: ஒரு கட்டத்தில் இனிமேல் இருக்கவே வேண்டாம் என தவறான முடிவையே நடிகை எடுக்கப் பார்த்த நேரத்தில் சரியான நேரத்தில் அவரது அம்மா கதவை திறந்து உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சியாகி விட்டாராம். ஆனால், அவருடைய மகளுக்கு ஆறுதல் மற்றும் தைரியம் சொல்லி தேற்றிய நிலையில், அடுத்த நாளே நடிகைக்கு ஒரு பெரிய படத்தில் நடிக்க போன் கால் வந்துள்ளது தான் இதில் ஹைலைட் என்கின்றனர். கூடிய விரைவிலேயே நடிகையின் அடுத்த பட அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X