பெரிய பிளான் போடும் பிரைட் நடிகர்.. அவசர சந்திப்புக்கு பின்னணியில் இவ்ளோ விஷயம் இருக்கா?
சென்னை: தமிழ் சினிமாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் பிரைட் நடிகர் தரமான பான் இந்திய படத்திற்காகத் தன்னை தயார் படுத்தி வருகிறாராம்.
சமீபத்தில் வெளியான பக்கத்து ஸ்டேட் படம் மிகப்பெரிய வசூலை மட்டுமின்றி இங்கே உள்ள ரசிகர்கள் மனங்களையும் கவர்ந்து விட்டது.
மேலும், செல்லும் இடமெல்லாம் இப்படியொரு படத்தை கொடுக்க இங்கே யாருமே கிடையாதா? என்கிற கேள்வி கணைகள் துளைத்து வருவதை தாங்கிக் கொண்டு சும்மா இருக்க நடிகரால் முடியவில்லையாம்.

மிஸ் ஆகிடுச்சு
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய இரண்டு தரமான படங்களை கொடுத்து அசத்தி இருந்தாலும், அந்த படங்கள் சரியான திட்டமிடாத வெளியீடாக மாறியது தான் பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்த முடியாமல் போனதற்கு காரணம் என்பதை நடிகர் தாமதமாகவே புரிந்து கொண்டார். அப்போதே அந்த படத்தை பயன்படுத்தி இருந்தால், இந்நேரம் இப்படியொரு பேச்சுக்கு ஆளாகி இருக்க வேண்டாம் என்பதை உணர்ந்துள்ளார்.

பெருமைமிகு படைப்பு
எத்தனையோ பிரம்மாண்ட படங்களையும் இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய படங்களையும் கொடுத்த நம்ம ஊரை பற்றி இப்படி இழிவாக இங்குள்ளவர்களே பேசும் நிலையை மாற்ற வேண்டும் என்கிற முடிவுக்கு நடிகர் வந்து விட்டாராம். மற்ற முன்னணி நடிகர்கள் சுதாரிப்பதற்கு முன்னமே நாம் அந்த விஷயத்தை இங்கே சாதித்துக் காட்ட வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் பிரைட் நடிகர்.

அவசர சந்திப்பு
ரியல் பான் இந்திய படைப்பை பண்ணப் போகிறோம் என முடிவு செய்த நிலையில், தான் இந்த அவசர சந்திப்பிற்கு உடனடியாக புறப்பட்டு சென்று இருக்கிறாராம் பிரைட் நடிகர். சமீபத்தில், அந்த இயக்குநரின் அறிவிப்பு வெளியானதற்கு பின்னணியிலும் இந்த நடிகர் தான் உள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

பிரம்மாண்டமான புராஜெக்ட்
ஏற்கனவே இரு பெரிய படங்களை லைன் அப்பில் வைத்து இருக்கும் அந்த பிரைட் நடிகர் அடுத்ததாக ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கக் கூடிய ஒரு பிரம்மாண்டமான புராஜெக்டை அந்த இயக்குநர் உடன் இணைந்து பணியாற்றப் போகிறாராம். கண்டிப்பாக இந்த முறை அதன் ரீச் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பு ஆதரவுடன் படத்தை உருவாக்கும் முயற்சியில் முழு உழைப்பை போட முடிவு எடுத்திருக்கிறாராம் பிரைட் நடிகர்.

விரைவில் அறிவிப்பு
இந்த அவசர சந்திப்பின் பின்னணியில் உருவாக உள்ள பிரம்மாண்ட படைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நடிகர் ஒருவருடன் இணைந்து பிரைட் நடிகர் பணியாற்றப் போகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு அனைத்து ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











