கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் பிரபலம்.. நடிகர் விஷயத்தில் தப்பு கணக்கு போட்டுட்டாங்களாம்

By Staff

சென்னை: இந்த நடிகருக்கு தென்னிந்திய சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவரது படங்களுக்கு குவியும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்கள் எல்லாம் தாறுமாறு. இந்த நடிகர் ஒரு டிரெண்ட் செட்டராகவே மாறிவிட்டார். அவரது சம காலத்து நடிகர்கள், மூத்த நடிகர்கள், அவருக்குப் பின் வந்த நடிகர்கள் என அனைவரையும் ஓரம் கட்டி வசூலில் விளையாடி வருகிறார். இவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே அவரது ரசிகர்கள் தான், அதுவும் அவரது பெண் ரசிகைகள் இவருக்கு கொடுக்கும் அன்பு என எல்லாம் மற்ற நடிகர்களால் அருகிலேயே வர முடியாது.

இப்படி இருக்கையில் நடிகர் தனது ரசிகரகளை நம்பி பலம் வாய்ந்தவர்களை எதிர்த்து அவர் ஆசைப்பட்ட விஷயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பிளான் போட்டார். இதற்காக அந்த நடிகர் நம்பியது எல்லாம் தனது ரசிகர்கள் மற்றும் ரசிகைகளைத்தானாம்.

Did Industry Veterans Miscalculate a Power Star s Massive Fan Support Viral Kollywood Buzz Explained

சமூக வலைதளங்கள்: ஆனாலும் நடிகர் எதிர்த்தது பெரிய அளவில் அனுபவம் கொண்டவர்கள் என்பதால், நடிகர் எப்படி வெற்றி பெறுவார்? எப்படி கரை சேர்வார் என்று பலரும் யோசித்தனர். ஆனால் நடிகரோ அந்த அனுபவசாலிகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, தான் நினைத்த காரியத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார். நடிகர் தான் நினைத்ததில் வெற்றி பெற முக்கிய காரணமே அவரது ரசிகர்கள் தானாம். அதுவும் அவரது ரசிகைகள் நடிருக்காக தங்களால் முடிந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவைத் திரட்டிக் கொடுத்துள்ளார்கள்.

கண் கெட்ட பின்னர்: இதனால் நடிகரோ அந்த அனுபவம் வாய்ந்த ஆலமரங்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அவர் நினைத்ததில் வெற்றி பெற்றதை ஏதோ தங்கள் வெற்றி என்பது போல கொண்டாடினர். சமூக வலைதளங்களில் நடிகருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றோ, அது நடிகருக்கும் தங்களுக்கும் இடையிலான போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றோ அந்த அனுபவசாலிகள் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் தற்போது நடிகருக்கு சமுக வலைதளத்தில் ஏக போக ஆதரவு இருந்ததால் தான் நாம் வீழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று எங்கு சென்றாலும் பேசி வருகிறார்களாம். இதைப் பார்த்த பலரும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன செய்யவில்லை என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X