»   »  நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு?

நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லி தரப்பில் பாடகியை சமாதானம் செய்துவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

நள்ளிரவு பார்ட்டியில் ஒல்லி நடிகரின் ஆட்கள் பிரபல பாடகியை தாக்கி காயப்படுத்தியதாக பாடகியே ட்விட்டரில் தெரிவித்தார். தனது நடிகர் கணவரை பிரிவதாகவும் கூறினார்.

Did Olli pacify the singer?

இந்நிலையில் தனது மனைவியின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து ஒல்லி பற்றி தவறாக ட்வீட்டியதாக பாடகியின் கணவர் தெரிவித்துள்ளார். ஒல்லி தரப்பில் பேசி பாடகியை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் தான் அவரின் கணவர் இப்படி விளக்கம் அளித்துள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

பார்ட்டியில் ஒல்லியும், பாடகியும் மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில் மோதிக் கொண்டார்களாம். அதே கோபத்தில் குடிபோதையில் பாடகி ட்வீட்டியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இந்நிலையில் பாடகியின் கணவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

English summary
Buzz is that Olli has pacified the singer who made shocking accusations against him on social media platform.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil