பட்ஜெட் அதிகம்னாலும் பரவாயில்லை.. அந்த இயக்குநரோடவே பண்ணலாம்.. உச்ச நட்சத்திரம் திடீர் முடிவு?

By Staff

சென்னை: அந்த இயக்குநர் மீது ஆரம்பத்தில் இருந்தே உச்ச நட்சத்திரத்திற்கு பெரிய அபிப்ராயம் எல்லாம் ஒன்றும் இல்லையாம்.

ஆனால், மாஸ் நடிகர் பரிந்துரைத்தாரே என்பதற்காக ஓகே சொன்ன நிலையில், அவருக்கே அந்த இயக்குநர் படம் எடுபடாத நிலையில், நம்ம ரேஞ்சுக்கெல்லாம் நிச்சயம் அந்த இளம் இயக்குநர் தாக்குப்பிடிப்பாரா? என்கிற சந்தேகம் நடிகருக்கு ஆழமாக எழுந்துள்ளதாம்.

இதன் காரணமாக ஏற்கனவே தயாரிப்பு தரப்பு வேண்டாம் என சொல்லி அனுப்பிய இயக்குநருடன் பணியாற்ற உச்ச நட்சத்திரம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிடித்துப் போன கதை

பிடித்துப் போன கதை

நடிகருக்கு அந்த இயக்குநர் சொன்ன கதை அப்படி பிடித்துப் போன நிலையில், தயாரிப்பு தரப்புக்கு கதை சொல்ல அனுப்பி உள்ளார். ஆனால், பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால், அந்த இயக்குநர் வேண்டாம் என தயாரிப்பு தரப்பு மறுத்து விட்டது. ஆனால், பட்ஜெட் குறைவாக வைத்து அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

பேராசை

பேராசை

குறைவான பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை நடிக்க வைத்து வசூலை அள்ளி விடலாம் என புரொடக்‌ஷன் பட்ஜெட்டை தயாரிப்பு தரப்பு சிக்கனம் பண்ணியது தான் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணம் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான படமும் ஓடாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவை எடுப்பதே என்று தெரியாமல் திணறி வருகிறதாம்.

நடிகருக்கு பிடிக்கவில்லை

நடிகருக்கு பிடிக்கவில்லை

சமீபத்தில் அந்த படத்தை பார்த்த நடிகருக்கு கொஞ்சம் கூட எந்தவொரு காட்சியும் ஒட்டவில்லையாம். ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட சொதப்பல்களை இயக்குநர் செய்திருப்பதை கவனமாக நோட் பண்ண நடிகர் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு தனிப்பட்ட முறையில் கூறி விட்டாராம்.

பட்ஜெட் பார்க்காதீங்க

பட்ஜெட் பார்க்காதீங்க

மேலும், இதுவரை தனக்கு கதை சொன்ன இயக்குநர்களிலேயே அந்த 'டெக் திருட்டு' படம் எடுத்த இயக்குநர் சொன்ன கதை தான் ரொம்பவே பிடித்து இருக்கிறது. பட்ஜெட் பார்க்காதீங்க, அந்த படம் உருவானால் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெருமையான படத்தை உங்க தயாரிப்பு தரப்பு கொடுத்த சந்தோஷம் இருக்கும் என்று கூறியுள்ளராம்.

கதை தான் ஹீரோ

கதை தான் ஹீரோ

நான் நடிச்சாலும் சரி, இல்லை எந்த முன்னணி நடிகர் நடிச்சாலும் சரி கதை நல்லா இல்லைன்னா, படம் நிச்சயம் ஓடாது. கதை தான் ஹீரோ அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என உச்ச நடிகர் தயாரிப்பு தரப்புக்கு புரியும் படி எடுத்து சொல்லி உள்ள நிலையில், முதன் முதலில் கதை சொன்ன இயக்குநருக்கு மீண்டும் அழைப்பு விடுத்து கதை கேட்க உள்ளார்களாம்.

விரைவில் முடிவாகிடும்

விரைவில் முடிவாகிடும்

இப்படி ஒரு பக்கம் பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் அந்த இயக்குநர் உடன் பணியாற்றப் போகிறோம் என அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு வாய்ப்பை அவருக்கே கொடுக்கலாம் என்றும் நடிகர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் உச்ச நடிகரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாரு? என்கிற இறுதியான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X