உச்ச நடிகரின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறதா? அந்த பிரச்சனை தான் காரணமா? பரபரக்கும் கோலிவுட்!

By Staff

சென்னை: ஏற்கனவே இயக்குநர் திரைக்கதையை ஸ்ட்ராங் ஆக்குகிறேன் என கிட்டத்தட்ட பல மாதங்களை வீணடித்த நிலையில், எல்லாம் ஓகே ஆகி ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், புதிய பிரச்சனை ஒன்று பூதாகரமாக கிளம்பி இருக்கிறது.

விரைவில் தொடங்கும் என எதிர்பார்த்த உச்ச நடிகரின் படப்பிடிப்பு இப்போதைக்கு ஆரம்பம் ஆகாது என்றும் பேச்சுக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இதற்கு காரணமே அந்த புதிய பிரச்சனை தான் என படக்குழுவினர் கடும் அப்செட்டில் ஆழ்ந்துள்ளனர்.3

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

உச்ச நடிகரின் படம் வெளியாகி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இயக்குநரும் தனது கடைசி படத்தை முடித்து விட்டு உச்ச நடிகருடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், திரைக்கதையை வலுவாக்க நடிகர் போட்ட உத்தரவு காரணமாக மேலும், சில மாதங்களை தாராளமாக சாப்பிட்டு விட்டார் இயக்குநர். எல்லாம் ரெடியாகி விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது என படக்குழுவே உற்சாகம் அடைந்தனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகள் தீவிரம்

விரைவில் படப்பிடிப்பை தொடங்க அனைத்து வேலைகளையும், செட் அமைக்கும் பணிகளையும் இயக்குநர் தீவிரமாக பார்த்து வந்த நிலையில், தற்போது திடீரென ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் காரணமாக பெரிய குழப்பமே படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தள்ளிப் போகிறதா

தள்ளிப் போகிறதா

உச்ச நடிகர் திடீரென அனைத்தையும் கொஞ்சம் நிறுத்தி வைக்க சொல்லி இருப்பதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்காது என்றும் சிறிது காலம் தள்ளிப் போக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே பல மாதங்கள் வீணாகி விட்ட நிலையில், கட கடவென படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் பிளான் போட்டிருந்த நிலையில், இப்படியொரு பிரச்சனை உச்ச நடிகரை யோசிக்க வைத்திருக்கிறது.

அந்த நோய் தான்

அந்த நோய் தான்

திடீரென பல பிரபலங்களையும் தாக்கி வரும் அந்த நோய் தான் உச்ச நடிகரை சற்றே யோசிக்க வைத்திருப்பதாகவும், அதிக கூட்டத்தை கொண்டு உருவாக்க நினைத்த படத்தை இப்போது ஆரம்பித்தால், மீண்டும் ஏதாவது சிக்கல் வருமா? இதன் வீரியம் சற்றே குறையட்டும் அதற்கு அடுத்து ஆரம்பித்து மின்னல் வேகத்தில் முடித்து விடலாம் என கூறியிருப்பதால், தாமதமாக தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

சரியாகி விட்டால்

சரியாகி விட்டால்

ஆனால், அதற்குள் அந்த பிரச்சனை சரியாகி விட்டால் திட்டமிட்ட நேரத்திலேயே படப்பிடிப்பை தொடங்கும் பிளானையும் போட்டிருக்கிறாராம் உச்ச நடிகர். அதற்கான பணிகளை விட்டு விடாதீங்க, அது ஒரு பக்கம் நடக்கட்டும் என அதற்கு பச்சைக் கொடி கொடுத்துள்ள நிலையில், எல்லாம் சரியாகி உரிய நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு யாருக்கும் எதுவும் ஆகாமல் ஒரு தரமான சம்பவம் விரைவில் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றும் படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X